திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பல நாள் தூக்கத்தை தொலைத்த சமந்தா.. குற்றம் செய்த மனசு குறுகுறுக்கதான் செய்யும்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் 2017 ஆம் ஆண்டு தெலுங்கு பிரபலம் நாக சைதன்யாவுடன் திருமணம் செய்துகொண்ட பிறகு ஒரு சில கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்த நடித்துக்கொண்டிருந்தார்.

அதன் பின் கடந்த ஆண்டு சமந்தா, நாக சைதன்யாவுடன் இருந்த திருமண உறவை முறித்துக்கொண்டு அவருக்குப் பிடித்த எல்லா கதாபாத்திரத்திலும் கொஞ்சம் கிளாமர் தூக்கலாகவே நடித்துவருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தில் கதிஜாவாக நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

தற்போது சமந்தா, தெலுங்கில் விஜய் தேவரகொண்டா உடன் குஷி என்ற படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று விரைவில் திரைக்கு வர காத்திருக்கிறது. இந்தப் படத்தை முடித்த கையோடு லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி விஜயின் 67-வது படத்தில் விஜய்க்கு தெறி, கத்தி, மெர்சல் படத்தை தொடர்ந்து நான்காவது முறையாக ஜோடி சேர உள்ளார்.

இப்படி பிஸியாக இருக்கும் நடிகையான சமந்தா சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் உரையாடுவது அவருக்கு மிகவும் பிடித்த விஷயம் என்பதால், அதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதில் சிலர் சமந்தாவை கேலி கிண்டல் செய்து, அவதூறாக பேசுவது தொடர் கதையாக இருப்பதால் அதை எண்ணி பல இரவுகள் தூங்காமல் தவித்துக் கொண்டிருக்கிறாராம்.

இதை அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட நெட்டிசன்கள் எந்த தவறும் செய்யவில்லை என்றால் ஏன் தூக்கம் வராமல் போகிறது. ‘குற்றமுள்ள நெஞ்சு தான் குறுகுறுக்கும்’, அப்படி என்றால் நீங்கள் ரசிகர்களை சொல்வதை உண்மையென ஏற்றுக் கொள்ளுங்கள் என சமந்தா சொன்னதை அவருக்கே திருப்பி விட்டிருக்கின்றது.

சமந்தா படங்களில் நடிப்பதை தவிர அழகு சாதனம், உடை, உணவு பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள் பற்றி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரப்படுத்தி வருகிறார். இதன் மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அதிக லாபம் கிடைக்கிறது. அதற்காகவே இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக தன்னைக் காட்டிக் கொள்கிறார்.

Trending News