Actress Samantha: கல்லடி பட்டாலும் கண் அடி படக்கூடாது என ஒரு பழமொழி உண்டு. இது அழகு பதுமை சமந்தாவுக்கு தான் சரியாகப் பொருந்தும். சென்னையில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த சமந்தா சினிமாவுக்கு வந்ததுடன் இல்லாமல் தெலுங்கு உலகின் பெரிய பணக்கார குடும்பம் ஆன நாகார்ஜூன் குடும்பத்தில் மருமகளானது பெரிய ஆச்சரியமான விஷயம் தான். ஆனால் அந்த குடும்பத்தையே உதறித் தள்ளி வெளியே வந்த பிறகும் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய உச்சத்தை அடைந்தது தான் ஆச்சரியம்.
நாக சைதன்யாவை திருமணம் செய்த பிறகு தான் சமந்தா தன்னுடைய நடிப்பின் வேறொரு பரிமாணத்தை வெளிக்கொண்டு வந்தார். அது மட்டும் இல்லாமல் தன்னுடைய உடல் கட்டமைப்பில் அதிக கவனம் செலுத்திய சமந்தா, ஜிம் வொர்க் அவுட் செய்யும் வீடியோக்கள் இளம் ஹீரோயின்களை நடுநடுங்க வைத்தது. அவ்வளவுதான் விவாகரத்து ஆகிவிட்டது, இனி சமந்தா வேலை காலி என நினைத்துக் கொண்டிருந்தபோது புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டு, எனக்கு எண்டே இல்லை என நிரூபித்தார்.
தனக்கென ஒரு ராஜாங்கத்தை ஆரம்பித்த சமந்தாவின் மீது யார் கண் பட்டதோ தெரியவில்லை அவருக்கு மையோசைட்டிஸ் எனும் விசித்திர நோய் தாக்கியது. சமந்தா தான் இந்த நோயால் தாக்கப்பட்டிருக்கிறேன் என்று அறிவித்த போது கூட நூறில் 99 சதவீதம் பேருக்கு இதைப் பற்றி எதுவுமே தெரியாது. உண்மையை சொல்லப்போனால் சமந்தாவால் தான் இப்படி ஒரு நோய் இருப்பதே வெளி உலகத்திற்கு தெரிய ஆரம்பித்தது. சமந்தா இன்று வரை இந்த நோயிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள போராடிக் கொண்டிருக்கிறார்.
Also Read:ஓவர் அல்டாப் காட்டிய நயன், சாட்டையை சுழற்றிய ஹீரோ.. இதெல்லாம் தேவையா அம்மணி?
வெளிநாட்டு சிகிச்சைக்காக பிரேக் எடுத்திருந்த சமந்தா மீண்டும் நடிக்க தொடங்கி விட்டதாக தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அறிவித்திருந்தார். அதோடு மட்டுமில்லாமல் இன்ஸ்டாகிராமில் தான் ஒரு ஹெல்த் பாட்கேஸ்ட் தொடங்க இருப்பதாக அறிவித்திருந்தார். தொடர்ந்து இதன் மூலம் தன்னுடைய ரசிகர்களிடம் பேசி வரும் சமந்தா இப்போது சமீபத்தில் நாக சைதன்யாவை பிரிந்த வருடம் தனக்கு எப்படிப்பட்ட வருடமாக இருந்தது என்பதை பகிர்ந்து இருக்கிறார்.
கண்கலங்கிய சமந்தா
இந்த வருடம் தனக்கு ரொம்பவும் கடினமாக இருந்ததாகவும், தன்னுடைய நண்பர் ஒருவருடன் மும்பைக்கு செல்லும் பொழுது இப்போதுதான் நான் நிம்மதியாக உணர்கிறேன், என்னால் நன்றாக சுவாசிக்க முடிகிறது, இனி என் வேலைகளில் நன்றாக கவனம் செலுத்துவேன் என்று சொன்னது தனக்கு ஞாபகம் இருப்பதாக சொல்லி இருக்கிறார். மேலும் அந்த ஒரு வருடம் அவருக்கு நிம்மதி மற்றும் அமைதி இல்லாமல் இருந்ததாகவும், சரியாக தூங்கியது கூட இல்லை என்றும் சொல்லியிருக்கிறார்.
இதற்கு முன்பு ரசிகர்களிடம் பேசும் பொழுது சமந்தா தன்னுடைய விருப்பு வெறுப்புகள் எது என்று தெரிந்து கொள்ளாமல் இருந்தது தான் தன் வாழ்க்கையிலேயே செய்த மிகப்பெரிய தவறு என பேசி இருந்தார். நாக சைதன்யா உடன் வாழ்ந்த வாழ்க்கை ரொம்பவும் நெருக்கடியாக இருந்தது என்பதை சமீப காலமாக தன்னுடைய பேட்டிகளில் சமந்தா மறைமுகமாக சொல்லி வருவது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.