புதன்கிழமை, ஜனவரி 22, 2025

நயன்தாரா, திரிஷா இடத்தை உடைக்க வரும் அடுத்த நடிகை.. ரீ-எண்ட்ரி கொடுக்க போட்ட பழைய திட்டம்

தமிழ் சினிமாவை பொருத்தவரைக்கும் கடந்த 10 வருடங்களில் நிறைய புதுமுக நடிகைகள் வந்து போயிருந்தாலும், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மட்டும் 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி ஹீரோயின் ஆகவே இருந்து வருகிறார். தனி கதாநாயகியாக நடித்து ஹீரோக்களுக்கு இணையான வரவேற்பை பெற்று வருகிறார் நடிகை நயன்தாரா. சினிமாவில் அவர் ஜோடி சேராத முன்னணி ஹீரோக்களே இல்லை என்று சொல்லலாம்.

இப்படி நல்ல மார்க்கெட் இருக்கும் பொழுது திருமணம் செய்து கொண்ட நயன்தாரா இனி குறிப்பிட்ட அளவு படங்களிலேயே நடிப்பேன் என்று சொல்லி இருந்தார். அதை அப்படியே பின்பற்றியும் வருகிறார். நயன்தாராவின் இந்த முடிவு யாருக்கு சாதகமாக இருந்ததோ இல்லையோ, நடிகை திரிஷாவுக்கு அதிர்ஷ்டமாகவே அமைந்துவிட்டது. சமீப காலமாக தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களின் படங்களில் எல்லாம் த்ரிஷாவை எதிர்பார்க்கலாம் என்ற அளவுக்கு ஆகிவிட்டது.

Also Read: எமனுக்கே பயம் காட்டி வந்த சமந்தா.. பீனிக்ஸ் பறவை போல மாஸ் காட்டப் போகும் சிங்கப்பெண்

இப்படி நயன்தாரா மற்றும் திரிஷா போட்டி போட்டுக் கொண்டு தமிழ் சினிமாவை ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் இன்னொரு முன்னணி நடிகை ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார். இவர் மட்டும் மீண்டும் தன் சினிமா பணியை தொடங்கி விட்டால் திரிஷா, நயன்தாரா இல்லை பல நடிகைகளும் ஓரமாக போய் ஓய்வு எடுக்க வேண்டியது தான்.

அப்படி மாஸ் என்ட்ரி கொடுக்க இருக்கும் கதாநாயகி சமந்தா தான். சமீப காலமாக மையோசைட்டிஸ் என்ற தோல் அழற்சி நோய்க்காக சமந்தா சிகிச்சை எடுத்து வருகிறார். இதனால் அவரால் படங்கள் எதுவும் நடிக்க முடியவில்லை மேலும் விளம்பர படங்களில் கூட நடிக்க முடியாமல் சமந்தா 30 கோடி வரை நஷ்டம் அடைந்து இருக்கிறார்.

Also Read: உடல் ஒத்துழைக்காததால் 25 கோடி நஷ்டம்.. பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட சமந்தா

தற்போது சமந்தா கேரளாவில் சிகிச்சை எடுத்து வருகிறார். அவருடைய உடல் நிலையில் நல்ல முன்னேற்றமும் இருக்கிறதாம். மேலும் சமந்தா சமீபத்தில் விமான நிலையம் வந்த வீடியோ காட்சியும் வெளியானது, மேலும் மீண்டும் தன்னுடைய உடற்பயிற்சியை தொடங்கிய வீடியோவும் அவரே சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார்.

இன்னும் ஒரே மாதத்தில் சமந்தாவின் உடல்நிலை பழைய நிலைக்கு வந்து விடுமாம். சமந்தா மீண்டும் புது உத்வேகத்துடன் சினிமாவில் களமிறங்க இருக்கிறாராம். நடிகை சமந்தா ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களுக்கும் பிடித்தமான நடிகை. இவர் மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்த பின்பு பல நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போக கூட வாய்ப்பு உண்டு.

Also Read: பீனிக்ஸ் பறவையாய் சிறகடிக்க தயாரான சமந்தா.. மொத்த வலியையும் கண்ணீரால் அலங்கரித்த மேடை

Trending News