புதன்கிழமை, ஜனவரி 15, 2025

நான் நடிச்ச படம் மொக்கை மாதிரி வந்திருக்கு.. சம்பளத்தை திருப்பி கொடுத்த மாவீரன் சரிதா

Actress Saritha: 80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவின் முக்கிய கதாநாயகியாக இருந்தவர் நடிகை சரிதா. இவர் பல வருடங்களுக்கு பிறகு இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி சங்கர் நடித்த மாவீரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் காலடி எடுத்து வைத்திருக்கும் இவர், ரொம்பவும் எதார்த்தமான விஷயங்களை தன்னுடைய சமீபத்திய பேட்டிகளில் சொல்லி வருகிறார்.

நடிகை சரிதாவை பொருத்தவரைக்கும் மற்ற நடிகைகளை போல இல்லாமல் தன்னுடைய நடிப்பில் இருக்கட்டும் அல்லது தோற்றத்தில் இருக்கட்டும் அனைத்திலும் தனக்கென ஒரு வித்தியாசத்தை வைத்திருந்தார். அந்த காலகட்டத்தில் ஹீரோ இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயத்தை எப்படி ரஜினி உடைத்தாரோ அதேபோல் ஹீரோயின் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இருந்த அத்தனை ஸ்டீரியோடைப்களையும் உடைத்த நாயகி இவர்.

Also Read:பிளேபாய் நடிகர் மீது காதல் மயக்கத்தில் இருந்த பானுப்பிரியா.. உண்மையை சொல்லிக் காப்பாற்றிய இயக்குனர்

கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் நடித்து பெயர் மற்றும் புகழ் சம்பாதித்து விடாமல் தனக்கு பிடித்த கதைகள், தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டர்களில் நடித்து தமிழ் சினிமாவின் அடையாளமாக இருக்கிறார் சரிதா. முன்னணி ஹீரோயினாக இருந்த காலகட்டத்திலேயே தன்னுடைய சக போட்டியாளர்களாக இருந்த பல நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்தவர் இவர்.

இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தரின் பேவரைட் கதாநாயகி என்று கூட சரிதாவை சொல்லலாம். தன்னுடைய படங்களில் அழுத்தமான கதாபாத்திரங்களில் சரிதாவை நடிக்க வைத்து அழகு பார்த்திருக்கிறார். சரிதா தற்போதைய பேட்டி ஒன்றில் தான் நடித்த படத்தின் ஃபர்ஸ்ட் காப்பியை பார்த்துவிட்டு, படம் பிடிக்காததால் வாங்கிய சம்பளத்தை திருப்பி கொடுத்து விட்டதாக சொல்லி பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.

Also Read:கவர்ச்சியான போட்டோஸ் போட்டும் 10 பைசா பிரயோஜனம் இல்லாமல் போன 5 நடிகைகள்.. கூச்சமே இல்லாத மீரா ஜாஸ்மின்

இவ்வளவு தைரியம் எந்த கதாநாயகிக்கு வரும், மேலும் ஒரு படம் முழுக்க நடித்துக் கொடுத்துவிட்டு தனக்கு திருப்தி இல்லாததால் வாங்கிய பணத்தையே திருப்பிக் கொடுக்கும் அளவிற்கு நடிப்பின் மீது இவ்வளவு பற்று எந்த கதாநாயகியால் வைக்க முடியும் என தெரியவில்லை. அந்த அளவுக்கு சினிமாவை நேசித்திருக்கிறார் நடிகை சரிதா.

பேட்டியில் அவ்வாறு சொல்லி இருந்தாலும் யார் மனதையும் புண்படுத்தக் கூடாது என்பதற்காக சரிதா படத்தின் பெயரை சொல்லவில்லை. இருந்தாலும் அந்த பேட்டியின் கமெண்ட்டுகளில் நெட்டிசன்கள் பலரும் அது வேதம் புதிது திரைப்படம் தான் அந்த படத்தில் தான் நடித்த கதாபாத்திரத்தில் மீது திருப்தி இல்லாததால் சம்பளத்தை திருப்பி கொடுத்து விட்டார் சரிதா என்று பதிவிட்டு வருகின்றனர்.

Also Read:அதிதி ஷங்கருக்கு கொடுத்த பெரிய டிமிக்கி.. அல்வாவோட மகிமை தெரியாமல் அறியா பிள்ளை எல்லாத்தையும் நம்புது

Trending News