புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பிரசவத்திற்கு பின் உடல் எடையை குறைக்கும் சாயிஷா..வைரலாகும் ஒர்க் அவுட் போட்டோ

தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை சாயிஷா வனமகன் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.அந்த படத்தை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் போன்ற ஏராளமான தமிழ் திரைப் படங்களில் இவர் நடித்துள்ளார்.

அவர் தமிழில் கஜினிகாந்த், டெடி போன்ற திரைப்படங்களில் நடிக்கும் போது சக நடிகர் ஆர்யாவை காதலித்தார். நடிகர் ஆர்யாவுக்கு சயீஷாவை விட 16 ஆறு வயது அதிகம். இருப்பினும் இந்த காதல் ஜோடி கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இந்த தம்பதிகளுக்கு கடந்த ஜூலை மாதம் ஆரியானா என்ற அழகான பெண் குழந்தை பிறந்தது. இதற்கு நடிகர் விஷால் உட்பட பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நடிகை சாயிஷா பிரசவத்தின் போது சற்று ஏறியிருந்த தன்னுடைய உடல் எடையை குறைக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளார்.

இதற்காக அவர் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் போட்டோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் பிரசவத்திற்கு பின்னர் ஒருவர் உடல் எடையை குறைப்பது அவ்வளவு எளிதல்ல. இருப்பினும் ஒருவர் சீராகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு பெண்ணும் அழகாக தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தன்னுடைய உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். இது நம் ஆரோக்கியம் சம்பந்தப்பட்டது. அதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

மேலும் பிரபலங்களை பார்த்து உங்கள் இலக்கை தீர்மானிக்காதீர்கள். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு உடலமைப்பு மற்றும் ஆரோக்கிய நிலை இருக்கும். இதனால் உடல் எடையை குறைப்பதற்கு சிறிது நேரம் எடுக்கலாம்.

என்னுடைய வாழ்க்கையில் உடற்தகுதி என்பது மிகவும் முக்கியம் என்பதை காட்டுவதற்காக இந்த போட்டோவை வெளியிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த போட்டோவுக்கு தற்போது பலரும் பாசிட்டிவ் கமெண்டுகள் கொடுத்து வருகின்றனர். மேலும் ஒரு சிலர் உங்களுக்கு குழந்தை இருக்கிறதா என்று ஆச்சரியத்தையும் காட்டி வருகின்றனர்.

sayyesha
sayyesha

Trending News