சிம்பு நடிப்பில் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான பத்து தல படத்தில் ராவடி பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்தார் நடிகை சாயிஷா. இவர் தற்போது துபாயில் தன்னுடைய மகளுடன் ஷாப்பிங் செய்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சாயிஷாவின் மகள் இப்போதுதான் பிறந்த மாதிரி இருந்தது, ஆனால் மளமளவென வளர்ந்து நிற்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. ஆர்யா- சாயிஷா இருவரும் கஜினிகாந்த் படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் இருவருக்கும் காதல் மலர்ந்தது.
Also Read: தொடர் தோல்வி அடைந்தாலும் சம்பளத்தை குறைக்காத 5 நடிகர்கள்.. சிக்கி சின்னாபின்னமான ஆர்யா
கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். கோலிவுட்டின் நட்சத்திர தம்பதியர்கள் ஆக இருக்கும் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. மேலும் சாயிஷாவின் மகள் ஆரியானா கைக்குழந்தையாக இருக்கும் புகைப்படமும் சோசியல் மீடியாவில் ரசிகர்களின் கவனத்தை பெற்றது.
மேலும் திருமணம் ஆகி குழந்தை பிறக்கும் வரை எந்தப் படங்களிலும் கமிட் ஆகாத சாயிஷா இப்போது பத்து தல படத்தின் மூலம் குத்தாட்டம் போட்டு மறுபடியும் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்திருக்கிறார். இதன்பிறகு அவர் அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் எண்ணத்துடன் தான் இருக்கிறார்.
Also Read: ஆர்யாவின் நடிப்பில் உருவாகும் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்.. இணையத்தில் மிரட்டும் டீசர்
இருப்பினும் சாயிஷாவிற்கு டாப் நடிகர்களின் படங்களில் வாய்ப்பு கிடைக்காததால் மறுபடியும் தன்னுடைய குழந்தை மற்றும் குடும்பத்துடன் நேரத்தை செலவிட ஆரம்பித்து விட்டார். இந்நிலையில் சாயிஷா துபாயில் தன்னுடைய மகள் ஆரியானாவுடன் ஷாப்பிங் செய்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவுகிறது.
துபாயில் குழந்தையுடன் ஷாப்பிங் செய்த சாயிஷா
