முன்னணி நடிகர்களை ரகசியமாக அழைக்கும் இளம் நடிகை.. படவாய்ப்பு வேணும்ல!

actress
actress

தமிழ் சினிமாவுக்கு வந்த புதிதிலேயே கண்டிப்பாக இந்த நடிகை மிகப் பெரிய ஆளாக வருவார் என அனைவரையும் நினைக்க வைத்தவர் தான் அந்த இளம் நடிகை. அந்த இளம் நடிகையும் டிவி நடிகரும் இணைந்து நடித்த படங்கள் பெரிய வெற்றியைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து அந்த நடிகைக்கு ரசிகர் பட்டாளம் அதிகமாக முன்னணி நடிகருடன் இரண்டு படங்களில் வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

தமிழ் சினிமாவை விட தெலுங்கு சினிமாவில் நல்ல வருமானம் என்பதால் அந்த பக்கம் வலையை விரித்தார் அந்த இளம் நடிகை. நடிகையின் அழகைப்பார்த்து மயங்கிப் போன சில நடிகர்கள் வாய்ப்பு கொடுத்தனர். இதன் காரணமாக அங்கேயும் ஒரு ரவுண்டு வந்தார்.

ஆனால் யார் பேச்சைக் கேட்டுக் கொண்டு உடல் எடையை குறைத்தார் என்பதுதான் தெரியவில்லை. உடல் எடையை குறைத்ததால் படவாய்ப்புகள் சுத்தமாக இல்லையாம். இது சம்பந்தமாக முன்னணி நடிகர்களிடம் ஓபன் ஆகவே கேட்டு விட்டாராம் அந்த நடிகை.

எதற்காக என்னை புறக்கணிக்கிறார்கள் என்று கேட்டதற்கு, எலும்பும் தோலுமாக இருந்தால் யார்தான் வாய்ப்புக் கொடுப்பார்கள் எனக் கூறி விட்டார்களாம். இதற்கு காரணமாக தற்போது ஒரு நாளைக்கு ஆறு வேளை சாப்பிட்டு வருகிறாராம் நடிகை.

தமிழ் சினிமாவைவிட தெலுங்கு சினிமா பெரியது என்று அங்கு சென்ற அந்த நடிகையை தற்போது அங்கிருந்தவர்கள் ஒதுக்க ஆரம்பித்ததால் மீண்டும் கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வர ஆசைப்பட்ட நடிகை தன்னுடன் நடித்த நடிகர்களுக்கு ரகசியமாக போன் செய்து எப்படியாவது படவாய்ப்புகள் கொடுங்கள் எனக் கெஞ்சி வருகிறாராம்.

Advertisement Amazon Prime Banner