எப்பொழுதுமே தனக்கென உள்ள தனி பாணியில் ரசிகர்களை கவர வேண்டும் என நினைப்பவர் இயக்குனரும், நடிகருமான பார்த்திபன். தற்போது இவர் குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் இயக்கி நடித்த படம் “ஒத்த செருப்பு” ரசிகர்களிடையே நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. தனித்துவமான கதைக்கரு, இப்படியெல்லாம் படமெடுக்க முடியுமா என அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளினார் பார்த்திபன். ஒத்த செருப்பு படம் பல விருதுகளையும் வென்று சாதனை படைத்தது.
புதிய பாதை படத்தில் நடிகராக அறிமுகமான பார்த்திபன் அந்தப் படத்தின் கதாநாயகியான நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள், மேலும் ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் 2010ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுக் கொண்டனர்.
அதன்பின் நடிகை சீதா சின்னத்திரை நடிகரான சதீஸ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் 2016 ஆம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்துவிட்டார். பின்னர் தம் குழந்தைகளுக்காக சீதா முதல் கணவர் பார்த்திபனுடன் சேர்ந்து வாழ சம்மதித்தார்.
ஆனால் பார்த்திபன் அதற்கு மறுத்துவிட்டார். நடிகை சீதா பார்த்திபனை காதலிக்கும் காலத்தில் அவருக்காக தலைமுடியை மொட்டை அடித்துக் கொண்டார் என பிரபல இயக்குனர் மற்றும் நடிகரான கே. பாக்யராஜ் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
