செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

தமிழ் சினிமாவில் நடிக்கும் ஆசையால் டாப் நடிகர்களுக்கு வலைவீசும் மலையாள நடிகை

தமிழில் டாப் நடிகராக வலம் வரும் அந்த நடிகர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் நடிகருடன் நடிக்கும் நடிகைகளும் மிகவும் பிரபலமாகி விடுகிறார்கள். அதனால் மீண்டும் மீண்டும் அந்த நடிகருடன் இணைந்து நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

தற்போது மலையாள நடிகை ஒருவர் தமிழ் சினிமாவில் நடிக்க அந்த நடிகரிடம் வாய்ப்பு கேட்டு வருகிறாராம். அதன்படி மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் அந்த நடிகை. இவர் தமிழ் சினிமாவில் தேசிய விருது நடிகருடன் ஜோடி சேர்ந்து நடித்த படம் அசுர வெற்றி பெற்றது.

அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகைக்கும் நல்ல பெயர் கிடைத்தது. அதுமட்டுமல்ல தமிழில் அந்த படத்திற்கும் நடிகர்களுக்கும் கிடைத்த வரவேற்பை பார்த்த அந்த நடிகைக்கு தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டதாம்.

இதனால், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் நடிகர்களுக்கு போன் செய்து பட வாய்ப்பு கேட்டு வருகிறாராம். அதுமட்டும் இல்லாமல் ஏற்கனவே அவர் ஜோடி சேர்ந்து நடித்த தேசிய விருது நடிகரை அணுகி, மீண்டும் உங்களுடன் ஒரு படத்தில் நடிக்க ஆசையாக இருக்கிறது என்று கூறியிருக்கிறாராம்.

ஆனால், பாவம் நடிகைக்கு தற்போது வரை எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லையாம். என்னதான் நடிகை மலையாளத்தில் பிரபலமாக இருந்தாலும், தமிழில் அவருக்கு இது முதல் படம் தான். அந்த படம் வெற்றி பெற்று என்பதற்காக அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்.

Trending News