புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பயில்வானிடம் காதல் வயப்பட்ட பிரபல நடிகை.. அவர் வாயாலேயே உண்மையை சொல்ல வைத்த ஷகிலா

Bayilvan Ranganathan: பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டில் இருப்பவர். பல சினிமா பிரபலங்களின் சொந்த வாழ்க்கையைப் பற்றி ரொம்பவும் தைரியமாக மீடியா முன் பேசி வருகிறார். இதனால் பல நேரங்களில் அவர் நெகட்டிவ் விமர்சனங்களையும் அதிகமாக சந்தித்து வருகிறார். இருந்தாலும் இது போன்ற சர்ச்சைகள் எதற்கும் பயப்படாமல் தொடர்ந்து இதுபோன்ற பேட்டிகளை யூடியூப் சேனல்களுக்கு வழங்கி வருகிறார்.

இப்படி பல பிரபலங்களின் அந்தரங்க வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டிருந்த பயில்வானை சமீபத்தில் நடிகை ஷகிலா பேட்டி எடுத்தார். அப்போது உங்களைப் பற்றி ஏதாவது ஒரு ரகசியத்தை சொல்லுங்கள் என்று அவர் கேட்டதற்கு பதில் நான் எப்படியோ அனுப்பி பார்த்தார். கடைசியில் முடியாமல் யாருக்கும் தெரியாத ரகசியம் என்று ஒரு விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார்.

Also Read:ஆச்சார குடும்பத்தில் அபச்சாரமாக வாழ்ந்த நடிகை.. மானத்திற்கு பயந்து விவாகரத்து செய்த புருஷன்

பயில்வான் ரங்கநாதன் பத்திரிக்கை துறையில் இருந்ததோடு, 90களில் காலகட்டத்தில் சினிமாவில் அடியாள் மற்றும் காமெடி காட்சிகளிலும் நடித்திருக்கிறார். ஆவாரம் பூ திரைப்படத்தில் கவுண்டமணியுடன் இவர் வரும் காமெடி காட்சிகள் இன்று வரை பிரபலம். அந்த சமயத்தில் காமெடி நடிகை ஒருவர் இவரின் மீது காதல் வயப்பட்டு, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டு இருக்கிறார்.

ஆனால் பயில்வான் அந்த நடிகையின் காதலை ஏற்க மறுத்து விட்டாராம். அந்த நடிகையும் இவரிடம் எவ்வளவோ கெஞ்சி புலம்பி இருக்கிறார். இவர் முடியவே முடியாது என்று மறுத்து விட்டாராம். இவ்வளவு விஷயத்தை சொன்ன பிறகும் அந்த நடிகையின் பெயரை சொல்லவே மாட்டேன் என பயில்வான் சொல்லிவிட்டார். ஷகிலா எவ்வளவு வற்புறுத்தி கேட்டும் அந்த நடிகையின் பெயரை சொல்லாதவர் நீங்களே கண்டுபிடித்துக் கொள்ளுங்கள் என்று ஹிண்ட் மட்டும் கொடுத்திருக்கிறார்.

Also Read:அந்தரங்க காட்சியில் எல்லை மீறும் நடிகை.. கவலையில் எக்ஸ் காதலியை தேடிப்போன கணவர்

அதாவது அந்த நடிகை தற்போது எந்த ஆதரவும் இல்லாமல் தனியாக இருப்பதாகவும், சில வருடங்களுக்கு முன்பு ஒரு பிரபல கட்சியின் உறுப்பினராக இருந்ததாகவும், அதன் பின்னர் வேறு ஒரு கட்சிக்கு சென்று அவரை அந்த கட்சியில் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், தற்போது ரொம்பவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்றும் பெயர் சொல்லாத அந்த நடிகையை பற்றி சொல்லி இருக்கிறார் பயில்வான்.

பேட்டியை பார்த்த நெட்டிசன்கள் அவர்களால் யார் அந்த நடிகை என்று யூகிக்க முடிந்த அளவுக்கு அந்த நடிகையின் பெயரை தங்களுடைய கமெண்டில் சொல்லி இருக்கிறார்கள். அதில் பல கமெண்ட்களில் ரிக்சா மாமா படத்தில் டீச்சர் கேரக்டரில் வரும் வாசுகி தான் அந்த நடிகை என்று சொல்லப்படுகிறது. ஆனால் பயில்வான் மட்டும் வெளிப்படையாக எதுவுமே சொல்லவில்லை.

Also Read:அப்பா பேரை கெடுக்க வந்த வாரிசு.. நடிகைகளுடன் போடும் கும்மாளம்

Trending News