பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி தமிழில் தளபதி விஜய்யின் ‘குஷி’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானார். இந்தப் படத்தில் மேக்கோரீனா என்ற பாடலுக்கு நடனமாடி இன்றுவரை இளைஞர்களின் மனதை கட்டிப் போட்டுள்ளார். மேலும் ஷில்பா ஷெட்டி இந்தியில் டாப் ஹீரோக்களுக்கு ஜோடி சேர்ந்து முன்னணி கதாநாயகியாக தனது நாற்பதாவது வயது வரை ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் ஷில்பா ஷெட்டி கடந்த 2019ஆம் ஆண்டு தொழிலதிபரான ராஜ் குந்த்ராவை திருமணம் செய்து கொண்டு, அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் ராஜ் குந்த்ரா தன்னிடம் நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டு வந்த நடிகர்களை நிர்வாணமாக நடிக்க கூறியதாகவும், அவர்களை வைத்து ஆபாச படமெடுத்த குற்றத்திற்காகவும் கடந்த மாதம் 19ம் தேதி மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மேலும் ராஜ்குந்த்ரா சொந்தமாக ஒரு செயலியை உருவாக்கி அதன் மூலம் தற்போது பிரச்சனையால் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை மலாடு என்ற இடத்தில் சொகுசு பங்களாவில் கடந்த பிப்ரவரி மாதம் போலீசார் ரெய்டு ஒன்றை நடத்தினர். அதில் ஆபாச படம் எடுத்துக் கொண்டிருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களை விசாரித்த போது தான் ராஜ்குந்த்ராவிற்கும் இதில் சம்பந்தம் உள்ளது என்பது அம்பலமானது நடிப்பதற்காக வாய்ப்புகள் தேடி அலையும் பெண்களை வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி உள்ளார். அவர்களை கட்டாயப்படுத்தி ஆபாச படங்களில் நடிக்க வைத்து அதை தனது சொந்தமான செயலி மூலம் பதிவேற்றம் செய்து அதைப் பார்க்க லட்சக்கணக்கில் பணம் வசூலித்து ஒரு நாளைக்கு 6 முதல் 8 லட்சம் வரை சம்பாதித்துள்ளார்.
இந்நிலையில் விசாரணையில் உண்மை தெரிந்து போலீசார் ராஜ்குந்த்ரா கைது செய்துள்ளனர். அந்த செயலியையும் மற்றும் அவர் வங்கி கணக்கையும் போலீசார் முடக்கி உள்ளனர்.
அத்துடன் ராஜ் குந்த்ராவின் சொத்துக்களில் ஒரு பைசாவை கூட தொடமாட்டேன் என்று ஷில்பா ஷெட்டி கூறியிருந்தார். மேலும் ‘சினிமாவில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருப்பதில் அதிக கவனம் செலுத்தியதால் எனது கணவன் ராஜ் குந்த்ரா ஆபாச படம் எடுத்து வந்தது எனக்கு எதுவும் தெரியாது’ என ஷில்பா ஷெட்டி தற்போது வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஷில்பா ஷெட்டி காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்கு வழிபட சென்றுள்ளார். அப்பொழுது கைது செய்யப்பட்ட தனது கணவரை குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு ஷில்பா ஷெட்டி பதில் எதுவும் கூறாமல் சென்றுவிட்டார்.