வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

சீரியலின் பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல.. ஸ்ரேயா அஞ்சானுக்கு ஜோடி சேரும் சாக்லேட் பாய்!

சின்னத்திரை ரசிகர்களை கவர்வதற்காக தற்போது தனியார் தொலைக்காட்சிகள் புதுப்புது சீரியல்களை தரையிறக்கி கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் ஜீ தமிழ் தற்போது ‘பேரன்பு’, ‘தெய்வம் தந்த பூவே’ ஆகிய புத்தம்புது சீரியல்களை மதிய நேரத்தில் ஒளிபரப்பு செய்து கொண்டிருக்கிறது.

அதேபோன்று மேலும் ஒரு புது சீரியலை ஜீதமிழ் துவங்க உள்ளது. இதில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமணம்’ என்ற சூப்பர் ஹிட் சீரியலின் கதாநாயகி ஸ்ரேயா அஞ்சன் இந்த புது சீரியலில் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

மேலும் ஸ்ரேயா அஞ்சன் சில நாட்களுக்கு முன்பு தன்னுடன் நடித்த சீரியல் நடிகை சித்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சித்து தற்போது விஜய் டிவியில்’ ராஜா ராணி2′ என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இன்னிலையில் திருமணத்திற்கு பிறகு ஸ்ரேயா அஞ்சன் மீண்டும் சின்னத்திரையில் தன்னுடைய நடிப்பை துவங்க உள்ளதால், ரசிகர்கள் அவர் நடிக்கும் சீரியலை குறித்த தகவல்களை சோஷியல் மீடியாவில் அப்டேட் செய்து கொண்டிருக்கின்றனர்.

மேலும் ஸ்ரேயா அஞ்சன் ஜீ தமிழில் நடிக்க உள்ள சீரியலுக்கு ‘ரஜினி’ என்ற தற்காலிக பெயர் சூட்டப்பட்டுள்ளது. அத்துடன் இந்த சீரியலில் ஸ்ரேயா அஞ்சனுக்கு ஜோடியாக அருண் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

அத்துடன் இந்த சீரியலில் பிரீத்தா, ஸ்ரீலேகா, ஹேமந்த் உள்ளிட்ட பல சீரியல் பிரபலங்கள் நடிக்க உள்ளனர். எனவே இந்த புத்தம்புது சீரியலின் ப்ரமோ கூடிய விரைவில் வெளியாக உள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.

Trending News