ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

இதோட நிறுத்திக்கோங்க! விஜய் விவகாரத்தில் கொதித்தெழுந்த சிம்ரன்.. வைரலாகும் இன்ஸ்ட்டா பதிவு

Simran: நடிகை சிம்ரனின் இன்ஸ்டாகிராம் பதிவு பலரையும் கலங்கடித்திருக்கிறது. சிம்ரன் பொதுவாக தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர். திருமணம் ஆகி, பிள்ளைகள் தோலுக்கு மேல் வளர்ந்த பிறகும் சிம்ரனின் பழைய சினிமா வாழ்க்கையை பற்றி நிறைய செய்திகள் இதுவரை வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன.

ராஜூ சுந்தரத்துடன் காதல் உறவில் இருந்தார், கமலஹாசன்- சரிகா விவாகரத்திற்கு சிம்ரன் தான் காரணம் என இன்று வரை நிறைய பேர் பேசி இருக்கிறார்கள். இது எதற்குமே சிம்ரன் செவி கொடுத்தது இல்லை, பதிலும் சொன்னது இல்லை.

கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தனக்கு எது வருமோ அதை செய்து வருகிறார். அதே போன்று வாய்ப்புகளுக்காக போட்டோ ஷூட் எடுக்கிறேன், பிரபலம் தேடிக் கொள்கிறேன் என சிம்ரன் இதுவரை எதுவுமே செய்தது கிடையாது.

அப்படி இருக்கும் பட்சத்தில் திடீரென நேற்று கொதித்து எழுந்து சிம்ரன் இன்ஸ்டாகிராமில் போட்ட பதிவு எல்லோருக்குமே சற்று ஆச்சரியம் தான். சிம்ரன் இந்த அளவுக்கு கோபப்படும் அளவுக்கு அவரை சீண்டியது யார் என எல்லோருக்குமே கேள்வி எழுந்தது.

விஜய் விவகாரத்தில் கொதித்தெழுந்த சிம்ரன்

அந்த அற்புதமான வேலையை செய்தது வலைப்பேச்சு யூடியூப் சேனல் தான். ஏற்கனவே கடந்த சில வாரங்களாக யோகி பாபுவை கண்டன்ட்டாக பயன்படுத்தி வந்தார்கள். அதை தொடர்ந்து மீண்டும் சினிமா கதை ஆரம்பிக்கிறேன் என்ற பெயரில் சிம்ரனை வம்புக்கு இழுத்து வைத்திருக்கிறார்கள்.

சிம்ரனின் கணவர் தயாரிப்பாளராகி, அந்த படத்தில் சிம்ரன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இதை தொடர்ந்து வலைப்பேச்சு யூடியூப் சேனலில் சிம்ரன் விஜய் இடம் தான் தயாரிக்கும் படத்திற்கு கால் சீட் கொடுக்கும் படி சொன்னதாகவும், அதற்கு விஜய் இதெல்லாம் உங்களுக்கு செட்டாகாது என எடுத்துரைத்ததாகவும் அந்த சேனலில் பேசி இருக்கிறார்கள்.

அது மட்டுமில்லாமல் உள்ளூர் காரனுக்கு தான் விஷயம் தெரியும், வெளியூர் காரன் தான் தெரியாமல் மாட்டிக் கொள்வது. இவர்களெல்லாம் நடிகைகளாக இருக்கும்பொழுது ஷூ போடுவதற்கு கூட தனியாக ஆள் வைத்திருப்பார்கள்.

ஆனால் இவர்களே தயாரிப்பாளரானால் நிலைமை என்னவாகும் என்பது தெரியாததால் தான் இப்படி எல்லாம் முடிவெடுக்கிறார்கள் என பேசி இருந்தார்கள். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தான் சிம்ரன் பதிவிட்டிருக்கிறார்.

அந்த பதிவில் சிம்ரன், நான் இதுவரை அமைதியாக இருந்தேன், இனிமேல் அது முடியாது. நான் எந்த ஒரு பெரிய ஹீரோக்களுடனும் இணைந்து பணியாற்ற விரும்பவில்லை. இதற்கு முன்னால் பணியாற்றி இருக்கிறேன்.

என்னுடைய பெயரை பயன்படுத்தி நான் எந்த இடத்திலும் அட்வான்டேஜ் ஆக நடந்து கொள்ள வேண்டும் என நினைத்தது இல்லை. என்னைப் பற்றிய வதந்திகளுக்கு யாருமே முடிவெடுக்க முன்வரவில்லை. இதனால் நானே அதை செய்கிறேன்.

ஸ்டாப் என்பது ரொம்பவும் பவர்ஃபுல்லான வார்த்தை. அதை நான் இப்போது உபயோகிக்கிறேன் தயவு செய்து என்னை பற்றி யாரும் பேச வேண்டாம் என பதிவிட்டு இருக்கிறார்.

Trending News