திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

விஜய்யுடன் ஐட்டம் டான்ஸ் ஆட இதுதான் காரணம்.. பல நாள் கேள்விக்கு பதில் அளித்த சிம்ரன்

நடிகை சிம்ரன், ரிஷி பாலா என்னும் இயற்பெயர் கொண்டவர். நடிகைகள் குஷ்பூ மற்றும் ஜோதிகா வரிசையில் மும்பையில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் வெற்றி கண்ட நடிகை இவர். நடிகர்கள் பிரபுதேவா மற்றும் அப்பாஸ் நடித்த விஐபி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய ஸ்டார்களுடன் நடித்தார்.

சிம்ரனை பொறுத்த வரைக்கும் ஆரம்ப காலத்தில் படு கிளாமராக நடித்து வந்தார். எவ்வளவு கிளாமராக ஆடை அணிந்தாலும் அவருக்கு மட்டும் கச்சிதமாக பொருந்தி விடும் அப்படி ஒரு உடலமைப்பு கொண்டவர் சிம்ரன். மேலும் ஹீரோக்களுக்கு இணையான நடனத்தில் பட்டையை கிளப்ப கூடியவர். சிம்ரனை போல் நடனம் ஆடுவதற்கு இன்று வரை தமிழ் சினிமாவில் ஹீரோயின்கள் இல்லை என்பது தான் உண்மை.

Also Read:விஜய், தனுஷை போல ரூட்டை மாற்றிய ரஜினி.. அவ்வளவு அடி வாங்கியும் ஆசை யார விட்டுச்சு

எந்த கதாபாத்திரத்திலும் கச்சிதமாக பொருந்தக் கூடியவர். நடிகைகளை பொறுத்த வரைக்கும் மார்க்கெட் கொஞ்சம் டல்லடிக்கும் பொழுது தான் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடுவதற்கு களம் இறங்குவார்கள். ஆனால் சிம்ரன் மட்டும் உச்சகட்ட நடிகையாக இருக்கும் பொழுதே அவ்வப்போது ஏதாவது ஒரு படங்களில் ஒரு பாட்டுக்கு மட்டும் வந்து ஆடுவார்.

அப்படி அவர் உச்சத்தில் இருக்கும் பொழுது தான் தளபதி விஜய்யின் யூத் படத்தில் ஆல்தோட்ட பூபதி பாடலுக்கு நடனம் ஆடினார். இது பற்றி அப்போது ரசிகர்கள் கேட்ட பொழுது எனக்கு நடனம் ஆடுவது ரொம்பவும் பிடித்த ஒரு விஷயம். மேலும் நல்ல படங்களில் நடனமாட அழைக்கும் பொழுது எனக்கு பிடித்த விஷயத்தை செய்ய நான் தயங்குவதில்லை. இது என் வாழ்க்கை இதை நான் தான் முடிவு செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.

Also Read:அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு தயாரான லோகேஷ்.. அதிரடியாக கண்டிஷன் போட்ட விஜய்

மேலும் அப்போது சிம்ரனிடம் அந்தப் பாடலுக்கு ஆட வேண்டாம் என்று நிறைய பேர் சொல்லி இருக்கிறார்கள். அதையும் மீறி தான் அவர் ஆடி இருக்கிறார். அந்த பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. ஒருவேளை அவர்களது பேச்சை எல்லாம் நான் கேட்டிருந்தால் அப்படி ஒரு சூப்பர் ஹிட் வாய்ப்பை நான் இழந்து இருப்பேன் என்று சிம்ரன் சொல்லி இருக்கிறார்.

இதேபோன்று சிம்ரன் இயக்குனர் ராஜு சுந்தரத்துடன் இணைந்து ஆடிய தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடல் பல வருடங்கள் கழித்தும் இன்று வரை ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது. அதேபோன்று நடிகர் சூர்யாவின் பிதாமகன் திரைப்படத்திலும் சிம்ரன் ஒரு பாடலுக்கு ஆடி இருப்பார். கடைசியாக தமிழில் கேப்டன் திரைப்படத்தில் நடித்த சிம்ரன் தற்போது இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

Also Read:விஜய் பட வில்லனுக்கு வந்த பகிரங்க மிரட்டல்.. அந்தரங்க வீடியோவை வெளியிடுவது உறுதி

Trending News