புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஈசிஆரில் ஹோட்டல் பிசினஸ் நடத்தும் நடிகை சிம்ரன்.. மெனு கார்டை பார்த்தால் நெஞ்சு வலி வந்துடும் போலையே!

Actress Simran Hotel Business: 1997இல் ஒன்ஸ்மோர் படத்தில் அறிமுகமாகி கடந்த 2003 ஆம் ஆண்டு வரை தமிழ் சினிமாவின் ராணி ஆக இருந்தவர் தான் நடிகை சிம்ரன். இடுப்பழகி சிம்ரன் மும்பையில் இருந்து வந்த நடிகை என்றாலும் ஒரு காட்டன் புடவை, நெற்றியில் பொட்டு, தலையில் பூ என வைத்து விட்டால் அப்படியே தமிழ்நாட்டு பெண் போலவே இருப்பார். அதே நேரத்தில் டைட்டாக ஜீன்ஸ் அணிந்து, போனிடைல் போட்டு ஹீரோக்களுக்கு இணையாக ஆடினால் மொத்த பேரும் மூக்கின் மீது தான் விரல் வைக்க வேண்டும்.

தொட்டு தொட்டு பேசும் சுல்தானா, ஆல்தோட்ட பூபதி போன்ற பாடல்கள் சிம்ரனின் நடனத்தில் இன்று வரை பிரபலம். சிம்ரன் இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றதற்கு முக்கியமான காரணம் அவருடைய கனகச்சிதமான உடல் அமைப்பு தான். சிம்ரன் நடிப்பை பிசியாக இருந்த போது தன்னுடைய சின்ன வயது நண்பர் தீபக் என்பவரை திருமணம் செய்து மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். குழந்தைகள் எல்லாம் பிறந்த பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார்.

சினிமா மட்டுமில்லாமல் சிம்ரனுக்கு சொந்தமாக ஹோட்டல் பிசினஸும் இருக்கிறது. இந்த ஹோட்டலின் பெயர் கோட்கா. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள அக்கரை பகுதியில் மெயின் ரோட்டிலேயே இந்த கடை அமைந்திருக்கிறது. முதலில் துணி கடை பிசினஸ் ஆக இதை தொடங்கிய சிம்ரன், பின்னர் நட்சத்திர ஹோட்டலாக மாற்றி இருக்கிறார்.

Godka 1
Godka 1

காலை 11 மணிக்கு ஆரம்பித்து இரவு 11 மணிக்கு மூடப்படும் இந்த ஹோட்டலில் இரண்டு பேர் அமர்ந்து சாப்பிடும் டேபிளை புக் பண்ணினால் 700 ரூபாய் ஆகும். இந்த ஹோட்டலில் ஆம்லெட் வகைகள் 300 ரூபாயிலிருந்து ஆரம்பம் ஆகிறது. சாதாரண கார்லிக் பிரெட்டின் விலை 130 ஆகும். பேபிகார்ன் 280 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.சிக்கன் லாலிபாப் 280 ரூபாய், வருத்த நண்டு 380 ரூபாய். எல்லா விதமான சைவ உணவும் சேர்ந்த ஒரு தட்டின் விலை ஆயிரம் ரூபாய், அசைவ உணவு சேர்ந்த தட்டின் விலை 1500 ரூபாய்.

Godka 2
Godka 2

இந்த கடையில் ஐஸ்கிரீமின் விலை 150 ரூபாயிலிருந்து தான் தொடங்குகிறது. சாக்லேட் பிரவுனி 280 ரூபாய், சாதாரண தாளித்த பருப்பு 210 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சிம்ரனுக்கு சொந்தமான கோட்கா உணவகத்தின் மெனு கார்டு பார்த்தால் நெஞ்சு வலியே வந்துவிடும் அளவுக்கு உணவுகளின் விலை இருக்கிறது. இருந்தாலும் இந்த ஹோட்டல் கிழக்கு கடற்கரை சாலையின் அமைந்திருப்பதால் பிசினஸில் கலை கட்டுகிறது. இதன் மூலம் சிம்ரன் லட்சத்தில் சம்பாதிக்கிறார்.

Godka 3
Godka 3

 

Trending News