வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

நயன்தாரா கன்னத்தில் அறைந்த நடிகை.. ஸ்கிரிப்டில் இல்லாமல் பழி வாங்கிய இயக்குனர்

நடிகை நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோரின் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான, நானும் ரவுடிதான். இந்த திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். இத்திரைப்படம் வெளியாகி வசூலில் பட்டையை கிளப்பிய நிலையில் நயன்தாரா இத்திரைப்படத்தில் நடித்திருந்த தருவாயில் பல திரைப்படங்களில் கமிட்டாகி ஒரே சமயத்தில் பல படப்பிடிப்புகளுக்கு சென்று வருவாராம்.

அந்த வகையில் கிராமப்புற கதைக்களத்தில் நடிக்க ஆசைப்பட்ட நயன்தாரா இயக்குனர் ராம்நாத் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான திருநாள் திரைப்படத்தில் நடித்து இருந்தார். அப்போது நானும் ரவுடிதான் திரைப்படத்தின் ஷூட்டிங்கை லேட்டாக முடித்து விட்டு அசதியாக வந்த நயன்தாரா, திருநாள் திரைப்படத்தின் முதல் நாள் சூட்டிங் சென்று இயக்குனர் ராம்நாத்திடம் இன்று ஷூட்டிங்கை விரைவாக முடித்து விடுங்கள் என தெரிவித்துள்ளார்.

Also read: நயன்தாரா இடத்தை பிடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் போட்ட கண்டிஷன்.. இப்படியே போனால் ஹீரோக்களின் நிலைமை

உடனே இயக்குனர் ராம்நாத் சரி என்று கூறிவிட்டு கிட்டத்தட்ட 2 மணி நேரம் கூடுதலாக இத்திரைப்படத்தின் முதல் நாள் சூட்டிங்கை நடத்தி விட்டு நயன்தாராவை அனுப்பிவிட்டாராம். பிறகு இன்டெர்வல் காட்சியின் போது, நயன்தாராவின் தாயாக நடித்த நடிகை ரமாவிடம் நயன்தாரா கன்னத்தில் அறை வாங்கும் காட்சி இடம் பெற்றிருக்கும்.

ஆனால் ஸ்கிரிப்டில் இக்காட்சி இல்லாதபோதிலும், இயக்குனர் ராம்நாத் திடீரென அந்த காட்சியை அமைத்தாராம். உடனே அந்த காட்சியில் நடித்துக் கொடுத்த நயன்தாரா பரவாயில்லை என பெரிய மனதோடு தெரிவித்துவிட்டாராம். 2015ஆம் ஆண்டு காலகட்டத்தில் நயன்தாரா ரீஎண்ட்ரி கொடுத்து மாஸ் கிளப்பிய காலகட்டம்.

Also read: காலில் விழுந்து சமாதானப்படுத்திய நயன்தாரா.. திருமணத்திற்கு பின் நடக்கும் எதிர்பாராத ட்விஸ்ட்

அப்போது நயன்தாரா நினைத்திருந்தால் இந்த காட்சியை ஏன் வைத்தீர்கள் என கேள்வி கேட்டிருக்கலாம். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் திரைப்படம் என்றால் காட்சிகள் மாறுவது சகஜம் என புரிந்து கொண்ட நயன்தாரா அதனை பெரிதாக எடுத்துக் கொண்டு செயல்படவில்லை.

இதன் காரணமாக தான் நயன்தாரா திருமணம் செய்த போதிலும் தற்போது வரை பல திரைப்படங்களில் கமிட்டாகி லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவை அனைத்திற்கும் அவரின் பொறுமை தான் காரணம் என கோலிவுட் வட்டாரத்தில் பலரும் நயன்தாராவை புகழ்ந்து பேசி வருகின்றனர்.

Also read: நயன்தாரா போல ஆகிடலாம் என பறப்பதற்கு ஆசைப்படும் ப்ரியா பவானி சங்கர்.. கடுப்பாகும் தயாரிப்பாளர்கள்

Trending News