சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

பட வாய்ப்பு இல்லாதால் சினேகாவை வளைத்து போட்ட விஜய் டிவி.. கலக்கலாக வெளிவந்த புகைப்படம்

விஜய் டிவி புதுமையான பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதன் மூலம் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்து வருகிறது. தற்போது சூப்பர் டாடி என்ற ஒரு நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தி உள்ளது. அதில் பிரபலங்கள் தங்கள் குழந்தைகளுடன் பங்கு பெற்று விளையாடி வருகின்றனர்.

அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 4 நிகழ்ச்சி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இது குழந்தைகளுக்காக நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சி ஆகும். இதில் பங்கு பெறும் குழந்தைகள் அனைவரும் தங்கள் திறமைகளை தங்களுடைய நடிப்பின் மூலம் வெளிப்படுத்தலாம்.

தற்போது இந்த நிகழ்ச்சி 3 சீசன் களை வெற்றிகரமாக கடந்து தற்போது நான்காவது சீசனை எட்டியுள்ளது. இதற்கான ஷூட்டிங் தற்போது விஜய் டிவியில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் தொடங்க இருக்கும் இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட போட்டோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் பரவி வருகிறது.

அதில் பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமா வாக நடிக்கும் குழந்தை நட்சத்திரம் லிசா எடுத்துக்கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது. அந்த போட்டோவில் நடிகை சினேகா, நடிகர் சாந்தனுவின் மனைவி கிகி, பிக் பாஸ் புகழ் சம்யுக்தா ஆகியோர் உள்ளனர்.

நடிகை சினேகா நடன போட்டிகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கு பெற்றுள்ளார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குழந்தைகளுக்கான இந்த நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்க உள்ளார். மேலும் அவருடன் சமந்தாவும் மற்றொரு நடுவராக உள்ளார். இந்த நிகழ்ச்சியை கிகி தொகுத்து வழங்க இருக்கிறார்.

ஏற்கனவே இந்த நிகழ்ச்சியின் முந்தைய சீசனில் நடிகை வாணி போஜன், நடிகர் ரோபோ சங்கர் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். தற்போது இந்த சீசனில் புன்னகை அரசி சினேகா பங்கேற்பதால் இந்த நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்து வருகிறது.

juniorsuperstar4
juniorsuperstar4

Trending News