Soundarya: நடிகைகளை பொறுத்த வரைக்கும் மரணத்திற்கு பிறகும் அவர்களுக்கு அமைதி கிடைப்பதில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
காலத்திற்கும் அவர்களைப் பற்றி ஏதாவது ஒரு செய்தி வெளியாகி கொண்டே இருக்கும். அப்படித்தான் இருவது வருடங்களுக்குப் பிறகு சௌந்தர்யாவின் மரணம் மீண்டும் பூதாகரமாகி இருக்கிறது.
அழகு தேவதையாக வளம் வந்த சௌந்தர்யா தமிழில் ரஜினி, கமல், கார்த்திக், பார்த்திபன் என பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தார்.
மீண்டும் பூதாகரமாக சௌந்தர்யா மரணம்
கடந்த 2004 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக தன்னுடைய அண்ணனுடன் ஹெலிகாப்டரில் போகும்பொழுது விபத்துக்குள்ளாகி மரணம் அடைந்தார்.
இந்த நிலையில் இருபது வருடங்களுக்கு பிறகு ஆந்திராவை சேர்ந்த நபர் ஒருவர் சௌந்தர்யாவின் மரணம் கொலை. அந்த கொலை செய்தது பிரபல நடிகர் மோகன் பாபு.
சௌந்தர்யாவுக்கு சொந்தமான ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கும் விருந்தினர் பங்களாவை அடைவதற்காக இந்த கொலை நடந்தது என புகார் அளித்திருக்கிறார்.
இது குறித்து சௌந்தர்யா கணவர் ரகு மறுப்பு தெரிவித்திருக்கிறார். புகாரை ஏற்று மீண்டும் இந்த மரண வழக்கு விசாரிக்கப்படுமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.