செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

கல்யாணமாகியும் ஸ்ரீப்ரியாவை துரத்தி துரத்தி காதலித்த நடிகர்.. இத்தனைக்கும் அவருக்கு ரெண்டு பொண்டாட்டி!

திருமணமாகி இரண்டு மனைவிகள் இருந்தபோதும் தன்னைவிட வயதில் மூத்த ஸ்ரீபிரியாவை பிரபல நடிகர் ஒருவர் துரத்தி துரத்தி காதலித்ததாக பத்திரிக்கையாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளது கோலிவுட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினி, கமல் போன்றோருக்கு ஜோடியாக நடித்து தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீபிரியா. தற்போது அவருக்கு 65 வயதாகிறது. சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கூட மக்கள் நீதி மையம் சார்பாக ஒரு தொகுதியில் போட்டியிட்டார்.

அதைப்போல் கார்த்தியும் அரசியலில் ஈடுபட்டவர் தான். முன்னாள் நடிகர் முத்துராமனின் மகன். நடிகர் கார்த்தி அக்கா மற்றும் தங்கை இருவரையும் திருமணம் செய்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

sri-priya-cinemapettai
sri-priya-cinemapettai

ஆனால் திருமணத்திற்குப் பிறகும் கார்த்திக் தன்னை விட வயது மூத்த ஸ்ரீபிரியாவை துரத்தி துரத்தி காதலித்துள்ளாராம். ஒருகட்டத்தில் ஸ்ரீபிரியாவுக்கும் கார்த்திக் மீது ஈடுபாடு வர இருவரும் காதல் ஆசையில் சுற்றி வந்துள்ளனர்.

மேலும் கார்த்திக் ஸ்ரீபிரியாவை திருமணம் செய்து கொள்வதாகவும் வாக்கு கொடுத்துள்ளார். பிறகு கார்த்திக் ஸ்ரீபிரியாவை திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் தற்கொலை செய்யும் அளவுக்கு சென்றுவிட்டாராம் ஸ்ரீபிரியா.

karthik-cinemapettai
karthik-cinemapettai

மேலும் நீ பெரிய நடிகன் என்பதால் என்னை விட்டுவிட்டு சென்றுவிட்டாயல்ல, அதனால் உன்னை விட பெரிய நடிகரை திருமணம் செய்து கொள்கிறேன் பார் என ராஜ்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானாராம் ஸ்ரீப்ரியா.

இந்த தகவலை பயில்வான் ரங்கநாதன் குறிப்பிட்டுள்ளார். இதில் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. இருந்தாலும் பகிரங்கமாக ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளதை வைத்து பார்க்கையில் ஏதோ ஒன்று இருந்திருக்கிறது என்பது மட்டும் உறுதி.

Trending News