சமீப காலமாக பிரபல நடிகை ஒருவர் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் என ரசிகர்களிடம் போக்கு காட்டி வந்த நிலையில் அப்படியாவது செய் நாங்களாவது நிம்மதியாக இருப்போம் என்ற அளவுக்கு அந்த நடிகையின் நடவடிக்கைகளைப் பார்த்து வெறுத்து விட்டனர் ரசிகர்கள்.
மாடலிங் துறையின் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்து பின்னர் ரசிகர்கள் மத்தியில் கேவலமான இமேஜை ஏற்படுத்திக் கொண்டவர் மீரா மீதுன். சொல்ற அளவுக்கு பெரிதாக ஏதோ ஒரு சாதனையையும் செய்யவில்லை.
ஆனால் மூச்சுக்கு முன்னூறு தடவை சாதனை செய்துள்ளதாக பல பேட்டிகளில் கூறி வந்தார். இந்நிலையில் சமீபகாலமாக ஒரு ஆண் நண்பர் ஒருவருடன் அத்துமீறிய புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார்.
இது அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் ஒருவிதமான வெறுப்பை ஏற்படுத்திய நிலையில் மேற்கொண்டு முன்னணி நடிகர்களை பற்றி தவறாக பேசியது ரசிகர்களை கொந்தளிக்க வைத்தது. அதனைத் தொடர்ந்து சமீபகாலமாக விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களை வம்பிழுத்து வருகிறார்.
அவர்களும் தங்கள் பங்குக்கு சமூக வலைதளங்களில் கமெண்ட்டுகள் மூலம் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நரேந்திர மோடிக்கு மீராமிதுன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலிருந்து, மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டதால் விரைவில் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் எனவும், அதற்கு காரணமானவர்களை தூக்கில் போடுங்கள் எனவும் விட் போட்டுள்ளார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் டென்ஷன் ஆகி, முதலில் அதை செய், நாங்களாவது நிம்மதியாக இருப்போம் எனும் அளவுக்கு கமெண்ட் பாக்ஸில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் மீண்டும் சமூக வலைத்தளத்தில் மீராமிதுன் விஷயம் சூடு பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.