சனிக்கிழமை, ஜனவரி 4, 2025

ரூம் போட்டு போதை ஏற்றிய 27 வயது பிரபல நடிகை.. பொடனியில் அடித்து இழுத்துச் சென்ற சோகம்

மும்பையில் உள்ள தனியார் ஹோட்டலில் ரூம் போட்டு போதை ஏற்றிக் கொண்டிருந்த பிரபல நடிகை ஒருவரை போலீசார் அதிரடியாக கைது செய்த சம்பவம் அந்த நடிகையின் மீதான மரியாதையை குறைத்துள்ளது.

பிரபல தெலுங்கு நடிகை ஸ்வேதா குமாரி. கன்னடத்தில் ரிங் மாஸ்டர் என்ற படத்திலும் சில பல தெலுங்கு படங்களில் இரண்டாம் கட்ட கதாநாயகியாக நடித்து வந்தாராம். கேசில் மாட்டிய பிறகு தான் இவர் ஒரு நடிகை என்பதே பலருக்கும் தெரியும்.

swetha-kumari-cinemapettai
swetha-kumari-cinemapettai

சமீபத்தில் தனது நண்பர்களுடன் கோவா மும்பை என ஊர் சுற்றி வந்துள்ளார். மும்பையில் போதை பிரச்சனைகள் அதிகமாக இருப்பதால் தொடர்ந்து அங்குள்ள தனியார் ஹோட்டலில் ரெய்டு நடந்து வந்துள்ளது.

இதில் ரூம் போட்டு போதை ஏற்றிக் கொண்டிருந்த ஸ்வேதா குமாரியை கையும் களவுமாக பிடித்து தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர் போலீசார். 27 வயதான ஸ்வேதா குமாரி ஆண் நண்பர்களுடன் சேர்ந்து அதிகமாக போதை பொருட்களை பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது.

மேலும் ஸ்வேதா குமாரியுடன் சேர்ந்து சில போதை பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர். இந்த போதைப் பொருட்கள் யாரிடமிருந்து பெறப்பட்டது என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்களாம்.

இதனால் ஓரளவு இந்த நடிகையின் மீது நல்ல மதிப்பும் வைத்திருந்த ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் ஸ்வேதா குமாரியை கழுவி ஊற்றி வருகின்றனர்.

Trending News