தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அந்த நடிகை. முன்னணியில் இருக்கும் அனைத்து ஹீரோக்களுடனும் அவர் ஜோடி போட்டு நடித்துள்ளார். அதைத் தொடர்ந்து தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடிகை ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமான முகமாக இருக்கும் இவர் கடந்த வருடம் பல பிரச்சனைகளில் சிக்கினார். இதனால் நடிகை சேர்த்து வைத்த பெயர் எல்லாம் போனது. அதோடு அவர் வசம் இருந்த பட வாய்ப்புகளும் கை நழுவிப் போனது.
இதனால் மன உளைச்சலில் இருந்த நடிகை யாரிடமும் பேசாமல் ஒதுங்கி இருந்தார். நடிகையை தேடி எந்த பட வாய்ப்புகளும் வராமல், இப்படி ஒரு நடிகை இருந்ததையே சினிமா உலகம் மறந்துவிட்டது என்று கூட சொல்லலாம். ஆனாலும் நடிகை பட வாய்ப்புக்காக காத்திருந்தார்.
அவர் காத்திருப்புக்கு பலனாக நடிகையை தேடி தற்போது பல திரைப்படங்கள் வந்திருக்கிறதாம். இதனால் குஷியான நடிகை மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறாராம்.
விட்ட இடத்தை பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் நடிகை தற்போது ஓவரா கெத்து காட்டி வருகிறாராம். நடிகை செல்லும் இடங்களில் எல்லாம் பார்ப்பவர்களிடம் அதிகமாக பேசி வருகிறாராம். இதை பார்த்தவர்கள் பலரும் பட வாய்ப்பு வந்தவுடன் இப்படியா ஆட்டம் போடுவது என்று கிசுகிசுக்கின்றனர்.