தமிழில் கேடி படத்தில் அறிமுகமாகி பல்வேறு வெற்றிப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை தமன்னா. இவரின் தோரணையும் நடிப்பும் இவருக்காகவே இரண்டாம் பாகம் எடுக்க வைத்தது தேவி தேவி 2 ப்ராஜெக்டுகளில்.
தமிழ் தெலுங்கு இந்தி கன்னடம் என அனைத்து மொழிகளிலும் அறியப்பட்ட நடிகை தமன்னா தற்போது டி.வி நிகழ்ச்சி ஒனறிற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.
தமிழில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் அதே மாஸ்டர் செஃப் நிகழ்ச்சிக்கு தான் தெலுங்கில் தமன்னாவை இறக்கியுள்ளது அந்த பிரபல தனியார் டிவி நிறுவனம்.
நடிகையாக பல்வேறு புறமும் வலம் வந்த தமன்னா முதல் முறையாக தொகுப்பாளராக களமிறங்குகிறார். ஆனால் பணத்திற்கு பஞ்சம் இல்லையாம் வாரி வழங்குவார்கள் என்று கூறுகிறார்கள்.

தம்மனாவிற்கு சினிமாவை விட அதிக சம்பளமாம். வருடத்திற்கு சில முறை திரையில் வந்தவரை இனி வாராவாரம் சின்னத்திரையில் காணலாம்.