வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

பைனான்சியரிடம் சிக்கிய நடிகை.. மூன்று நாட்கள் அடைத்து வைத்து கொடுமை

இப்போது படத்தில் வாய்ப்புக்காக கவர்ச்சி காட்டி நடிக்கிறார்கள். ஆனால் ஆரம்ப காலத்தில் நடிகையின் அழகு மற்றும் திறமையைப் பார்த்து தானாகவே அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தது.

இதை சரியாக பயன்படுத்திக் கொண்டு டாப் நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார். ஆனால் திடீரென நடிகைகள் சீக்கிரம் பணம் சம்பாதித்து கார், பங்களா என ஆடம்பரமாக வாழ வேண்டும் என்று ஆசை வந்தது.

அண்ணாமலை போல ஒரே பாட்டில் முன்னேற வேண்டும் என்றால் தயாரிப்பாளர் ஆனால் தான் முடியும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். பிரபல பைனான்சியரிடம் பெரும் தொகையை வட்டிக்கு நடிகை வாங்கி இருந்தார்.

படத்தையும் கஷ்டப்பட்டு எடுத்து வெளியிட்டு விட்டார். ஆனால் தியேட்டரில் ஈ ஓட்டாத குறை தான். படத்தைப் பார்க்க கூட்டமே வராததால் போட்ட பணம் எல்லாம் அம்பேல் ஆகிவிட்டது. மாதம் மாதம் வட்டி தொகையும் அதிகமாகிவிட்டது.

இதனால் பைனான்சியர் நடிகையை தனது ஊருக்கு வரவைத்து கஸ்டடியில் வைத்துள்ளார். பணத்தை கொடுத்து விட்டு தான் இங்கிருந்து நகர வேண்டும் என்று சொல்லிவிட்டாராம். மேலும் நடிகையின் கணவர் பணத்தை ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்.

அந்த மூன்று நாளும் நடிகை பைனான்சியரின் கட்டுப்பாட்டில் தான் இருந்தார். ஒரு வழியாக கணவர் பணத்தை ஏற்பாடு செய்த நிலையில் பைனான்சியரிடம் இருந்து நடிகை தப்பித்து விட்டார். அதிக ஆசை தேவையில்லாத பிரச்சனையை கொடுக்கும் என்பதை அப்போது நடிகை உணர்ந்து கொண்டார்.

Trending News