திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

28 வயது வித்தியாசம் உள்ள நடிகருடன் ஜோடி போடும் திரிஷா.. கோலிவுட்ல உடையும் மார்க்கெட்

Actress Trisha is paired with the 68-year-old actor: யானை தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொள்வது போல் திரிஷாவும் தனக்குத்தானே ஆப்பு வச்சு கிட்டார். 40 வயதாகும் திரிஷா இப்போதும் தன்னுடைய மார்க்கத்தை விட்டுக் கொடுக்காமல் அஜித், விஜய் என கோலிவுட்டில் டாப் ஹீரோக்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த சமயத்தில் தன்னைவிட 28 வயது அதிகம் இருக்கும் ஹீரோக்கு திரிஷா ஜோடியாக நடிக்க கமிட் ஆகி இருக்கிறார்.

தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் சிரஞ்சீவி அடுத்ததாக தன்னுடைய 156 ஆவது படமான விஷ்வம்பாரா என்ற படத்தில் இயக்குனர் மல்லிடி வசிஷ்டா இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டானது. பக்கா பேண்டஸி ஜானலில் உருவாகும் இந்த படத்தை யூவி கிரியேஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது. எம் எம் கீரவாணி இசையமைக்கும் இந்த படத்தை வரும் 2025 ஆம் ஆண்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

தற்போது இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகி கோலிவுட் ரசிகர்களை காண்டேற்றி இருக்கிறது. ஏனென்றால் இந்த படத்தில் 68 வயதாகும் சிரஞ்சீவியின் திரிஷா தான் ஜோடியாக நடிக்கிறார். இந்த விஷயத்தை திரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் படக்குழுவுடன் இணைந்திருக்கும் புகைப்படத்துடன் அறிவித்துள்ளார்.

Also Read: லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்துக்காக பதுங்கி இருக்கும் திரிஷா.. கடும் கோபத்திலும் அடக்கி ஆளும் குந்தவை

68 வயது நடிகருடன் ஜோடி போடும் திரிஷா

18 வருடத்திற்கு பிறகு மீண்டும் சிரஞ்சீவியுடன் நடிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் இருவரும் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2006ம் ஆண்டு வெளியான ‘ஸ்டாலின்’ என்ற தெலுங்கு படத்தில் இணைந்து நடித்தனர். அதன் பிறகு இப்போது விஷ்வம்பாரா என்ற படத்தில் ஜோடி சேர்ந்திருக்கின்றனர். சிரஞ்சீவிகள் மகள் ராம்சரண் ஹீரோவாகவே நடிக்க வந்துவிட்டார். அதன் பிறகும் சிரஞ்சீவியின் மவுசு குறையாமல் இன்னும் கதாநாயகனாக தான் நடித்துக் கொண்டிருக்கிறார்.

68 வயதாகும் சிரஞ்சீவிக்கு ஜோடியாக திரிஷா நடிப்பது தெலுங்கு ரசிகர்களை குஷிபடுத்தினாலும், கோலிவுட்டில் அவருடைய மார்க்கெட் சரிய போகிறது. ‘இனிமேல் அஜித், விஜய்க்கு ஜோடி போடுவதை கனவில் கூட நினைத்துப் பார்க்காதீர்கள் திரிஷா!’ என்றும் தமிழ் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கொந்தளிக்கின்றனர்.

18 வருடத்திற்கு பிறகு மீண்டும் இணையும் சிரஞ்சீவி- திரிஷா

Trisha-chiranjeevi-cinemapettai
Trisha-chiranjeevi-cinemapettai

Also Read: GOAT படத்தில் விஜய்க்கு தங்கச்சியாக நடிக்க தேர்வான 4 நடிகைகள்.. ஒருத்தரை கூட லாக் செய்ய முடியாமல் திணறும் கொடுமை

Trending News