வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

கோடிகளில் புரளும் குந்தவை.. 40 வயதில் திரிஷாவின் மொத்த சொத்து மதிப்பு

Trisha Net Worth : சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாகவும் ஹீரோயினாக நடிக்க முடியும் என்பதை செய்து காட்டி வருகிறார் திரிஷா. 40 வயதை கடந்தும் அழகு பதுமையாக வலம் வந்து கொண்டிருக்கும் திரிஷா இப்போது படங்களில் படு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார்.

இதைத்தொடர்ந்து நடுவில் சறுக்கல் ஏற்பட்ட நிலையில் தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். அதன் பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார். அதை காட்டிலும் திரிஷாவுக்கு சரியான கம்பேக் கொடுத்த படம் பொன்னியின் செல்வன் தான்.

மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ஏகப்பட்ட திரைபிரபலங்கள் நடித்த நிலையில் குந்தவை கதாபாத்திரத்தில் திரிஷா மேலும் மெருகேற்றி இருந்தார். அதன் பிறகு விஜய்யின் லியோ படத்தில் நடித்திருந்த நிலையில் இப்போது அஜித்துடன் விடாமுயற்சி மற்றும் கமலின் தங் லைஃப் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Also Read : 28 வயது வித்தியாசம் உள்ள நடிகருடன் ஜோடி போடும் திரிஷா.. கோலிவுட்ல உடையும் மார்க்கெட்

இந்நிலையில் கோடியில் புரளும் திரிஷாவின் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம். திரிஷா ஒரு படத்திற்கு 5 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் நிலையில் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். சென்னையில் 7 கோடி மதிப்பிலான ஆடம்பர பங்களா த்ரிஷாவின் பெயரில் இருக்கிறது.

அதேபோல் ஹைதராபாத்தில் 6 கோடி மதிப்பில் சொந்த வீடு வைத்துள்ளார். இதுதவிர 5 கோடி மதிப்பிலான பிஎம்டபிள்யூ, மெர்சிடஸ் பென்ஸ், 60 லட்சம் மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர், 75 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் போன்ற சொகுசு கார்களை த்ரிஷா பயன்படுத்தி வருகிறார். ஒரு வருடத்திற்கு 10 கோடி வரை சம்பாதித்து வரும் திரிஷாவின் சொத்து மதிப்பு தற்போது 100 கோடியை எட்டி இருக்கிறது.

Also Read : லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்துக்காக பதுங்கி இருக்கும் திரிஷா.. கடும் கோபத்திலும் அடக்கி ஆளும் குந்தவை

Trending News