புதன்கிழமை, ஜனவரி 22, 2025

பகலில் இயக்குனர், இரவில் தொழிலதிபர்.. ஒரே நேரத்தில் இரண்டு வண்டியை ஓட்டும் 24 வயது நடிகை

சமீபத்தில் வெளியான டிவி நடிகரின் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்திருந்த 24 வயது நடிகை அக்கட தேசத்தில் ஒரே நேரத்தில் இயக்குனர் மற்றும் தொழிலதிபர் ஆகிய இருவரையும் காதலித்து டேட்டிங் சென்று கொண்டிருக்கும் செய்திதான் இன்றைய சினிமா ட்ரெண்டிங்.

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனத்தில் குடும்ப இயக்குனர் எடுத்த டிவி நடிகரின் படத்தில் நாயகியாக நடித்தவர். அக்கட தேசத்தில் கவர்ச்சியை அள்ளித் தெளித்தாலும் தமிழில் கொஞ்சம் கூட கவர்ச்சி இல்லாத படத்தில் நடித்தார்.

24 வயதான அம்மணி சமீபகாலமாக தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட தயாரிப்பாளர் ஒருவரின் மகனை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. அக்கட தேசத்தில் இயக்குனராக இருக்கும் அவருடன் டேட்டிங் சென்று கொண்டிருந்தாராம்.

இந்த சம்பவம் தெரிந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. தற்போதும் அங்கேயே தொழிலதிபர் ஒருவருடன் இரவு நேரத்தில் பொழுதை கழித்து வருகிறாராம் அந்த நாயகி. இயக்குனரை விட தொழிலதிபர் மிகவும் செல்வச் செழிப்பாக இருப்பதால் அந்தப் பக்கம் தாவி விட்டதாக கூறுகின்றனர் அக்கடதேச வாசிகள்.

முன்னரெல்லாம் நடிகர்கள்தான் ஒரே நேரத்தில் பல நடிகைகளுடன் பொழுதை கழித்து வந்தனர். ஆனால் தற்போது சினிமா அப்படியே மாறிவிட்டது என்பது இந்த நடிகையின் போக்கில் தெரியவருகிறது. பகலில் இயக்குனருடனும், இரவில் தொழிலதிபருடனும் ஊர் சுற்றி வருகிறாராம்.

இன்னமும் இருவருக்கும் இந்த நடிகையின் தில்லாலங்கடி வேலை தெரியாமல் இருக்கிறது. ஒருவேளை அப்படி தெரிந்தால் அம்மணியின் டப்பா டான்ஸ் ஆடி விடுமாம். சின்ன பிள்ளையாக இருந்தாலும் காசு விஷயத்தில் பலே கில்லாடியாக இருக்கிறாராம் அந்த அம்மணி.

மேடம், வண்டிய பாத்து ஓட்டுங்க, ஆக்சிடென்ட் ஆயிரப் போவுது!

Trending News