திரையுலகில் நடிக்க வந்த ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் அந்த இளம் நடிகை. பல மொழிகளிலும் பிஸியாக நடித்து வந்த நடிகை சில வருடங்களுக்கு முன் நடித்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் அவருக்கு பாராட்டை பெற்று கொடுத்தது.
அந்தப் படத்துக்காக தேசிய விருது உட்பட பல விருதுகளை வாங்கிக் குவித்த நடிகையின் நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் தோல்வியடைந்து வருகிறது. அதிலும் அவர் கஷ்டப்பட்டு பல ரிஸ்க் எடுத்து நடித்த அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடாததால் நடிகை கடும் அப்செட்டில் இருக்கிறாராம்.
அதைத் தொடர்ந்து நடிகை பக்கத்து ஸ்டேட் பிரபல நடிகருக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடித்தார். அந்த படமும் தோல்வி அடைந்த நிலையில் நடிகை அடுத்தது என்ன செய்வது என்று தெரியாமல் கவலையில் இருக்கிறார். இந்த கேப்பில் விவகாரத்து நடிகர் தற்போது நடிகைக்கு தனியாக ரூட் போட்டுக் கொண்டிருக்கிறாராம்.
சமீபத்தில் அவர் நடிகையின் நடிப்பில் ஓடிடியில் வெளியான அந்த திரைப்படத்தை ஆகா ஓகோ என்று நடிகையிடம் புகழ்ந்து தள்ளியிருக்கிறார். இதன் மூலம் நடிகைக்கு ஆறுதல் கூறுகிறேன் என்ற பெயரில் அந்த நடிகர் அவரிடம் நெருங்க முயற்சிக்கிறார் என்று திரையுலகில் பேசி வருகின்றனர்.
ஏற்கனவே நடிகரின் வாழ்வில் ஏகப்பட்ட பிரச்சினைகள் வந்து கொண்டு இருக்கிறது. இதில் மேலும் ஒரு பிரச்சனையாக அவர் இப்படி செய்வது எல்லாம் அந்த இசையமைப்பாளரை கடுப்பு ஏற்றுவதற்கு தானாம். ஏனென்றால் தற்போது நடிகையும், அந்த இசையமைப்பாளரும் காதலிப்பதாகவும், விரைவில் அவர்கள் திருமணம் செய்யக் கூடும் என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் விவாகரத்து நடிகரின் இந்த செயல் பலரையும் விமர்சிக்க வைத்துள்ளது.