திரை உலகில் பிரபலமாக வலம் வரும் அந்த நடிகர் பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் அல்ல ரொம்பவும் வீக். அவருடைய இந்த விஷயம் தெரிந்ததால் தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட அவரின் முதல் மனைவி நடிகரை விவாகரத்து செய்து பிரிந்தார். ஆனாலும் அதைப்பற்றி வருத்தப்படாத அந்த நடிகர் உடனே இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகாவது இந்த விஷயங்களை எல்லாம் மூட்டை கட்டி விட்டு சினிமாவில் கவனம் செலுத்துவார் என்று பார்த்தால் நடிகர் மீண்டும் அதே தவறை தான் செய்து வருகிறாராம். சமீபத்தில் நடிகர் நடித்த திரைப்படத்தில் உடன் நடித்த அந்த அழகான நடிகையின் மீது ஒரு கண் வைத்திருக்கிறார்.
Also Read: சித்தார்த் பட வாய்ப்பு தந்தா படுக்கையை பகிர ரெடி.. உச்சகட்ட ஏக்கத்தில் பேசிய நடிகை
நடிகரின் ஆசையை புரிந்து கொண்ட அந்த நடிகையும் இவருக்கு அட்ஜஸ்ட் செய்திருக்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் நடிகரின் டார்ச்சர் அதிகமானதால் அந்த நடிகை ரொம்பவே நொந்து போயிருக்கிறார். எப்படி அவரிடம் இருந்து தப்பிப்பது என்று பிளான் போட்ட நடிகை இந்த விஷயத்தை கொஞ்சம் கொஞ்சமாக லீக் செய்திருக்கிறார்.
இப்படியே கசிய ஆரம்பித்த இந்த விவகாரம் நடிகரின் இரண்டாவது மனைவியின் காதுக்கும் எட்டி இருக்கிறது. இதை கேள்விப்பட்ட நடிகரின் மனைவி கையில் சூலம் எடுக்காத குறையாக பத்ரகாளியாகவே மாறி இருக்கிறார். ஆனால் நடிகரிடம் இது பற்றி கேட்டு சண்டையிடாமல் அவர் கொஞ்ச காலம் அமைதியாக இருக்க முடிவு செய்து இருக்கிறார்.
Also Read: அப்பாவை போல் மாசாக என்ட்ரி கொடுக்க துடிக்கும் வாரிசு.. ரகசியமாக நடந்து வரும் பயிற்சி
ஏனென்றால் ஆதாரம் இல்லாமல் நடிகரை கேள்வி கேட்டு பிரயோஜனம் இல்லை. அதனால் நடிகரின் வண்டவாளத்தை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என்று அவருடைய மனைவி காத்துக் கொண்டிருக்கிறார். அதனால் எப்போது வேண்டுமானாலும் இவர்களுடைய இந்த விஷயம் மிகப் பெரிய அளவில் வெடிக்கும் என்று திரையுலகில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
மேலும் முதல் மனைவியை போன்று இரண்டாவது மனைவியும் நடிகரை விவாகரத்து செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறது கோலிவுட் வட்டாரம். அதனால் நடிகர் இந்த வேலையெல்லாம் ஒதுக்கிவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தினால் மட்டுமே தப்பிக்க முடியும் என்ற நிலையில் இருக்கிறார்.
Also read: எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை தான்.. பெரிய அந்தஸ்துள்ள நடிகைகளை கிழித்து எரியும் பஜாரி நடிகை