செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

முன்னாள் காதலர் மீது செம கடுப்பில் நடிகை.. வேலியே பயிரை மேய்ந்த கதை

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தன்னுடைய முன்னாள் காதலர் மீது அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதற்கெல்லாம் காரணம் ஒரு படம் தான் என்கிறார்கள்.

குட்டி குஷ்பு என்கிற ரேஞ்சுக்கு புகழப்பட்டவர் தான் அந்த இளம் நடிகை. பார்க்க நன்றாக கொழுக்மொழுக் என இருந்ததால் வந்தவுடனேயே தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். போதாக்குறைக்கு கவர்ச்சி காட்டவும் தயாராக இருந்தார்.

அம்மணியின் அசத்தலை பார்த்து ஆடிப்போன தமிழ் ரசிகர்கள் அவருக்கு ஏகபோக வரவேற்பை கொடுத்த தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை ரேஞ்சுக்கு வளர்த்து விட்டனர். அந்த நேரத்தில்தான் விரல் நடிகருடன் காதல் ஏற்பட்டது.

கொஞ்ச காலம் இந்த காதல் நன்றாக சென்று கொண்டிருக்க திடீரென அந்த நடிகையின் தாயார் உள்ளே புகுந்து என்னுடைய மகள் சினிமாவில் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது என்று கூறி அந்த காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அதன் பிறகு பல வருடங்கள் எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் இருந்த இந்த இருவரையும் வைத்து சமீபத்தில் ஒரு படம் உருவானது. முதலில் கெஸ்ட் ரோல் என்று தான் அந்த நடிகரை கூட்டி வந்தார்களாம். அதன் பிறகு அந்த நடிகரின் காட்சிகள் படத்திற்கு செம பிளஸ் ஆகிவிட்டதால் மேலும் சில காட்சிகளை சேர்த்து தற்போது மொத்தமும் அந்த நடிகரின் படமாக மாறிவிட்டதாம்.

ஆனால் அந்த நடிகைக்கு அது 50 ஆவது படம். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த படத்தை தேர்ந்தெடுத்தார் அந்த நாயகி. ஆனால் கடைசியில் அது அந்த நடிகரின் படமாகவே மாறிவிட்டதால் தன்னுடைய முன்னாள் காதலன் மீது செம கடுப்பில் உள்ளாராம் அந்த நடிகை.

Trending News