வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

நாலாவது கல்யாணம் என்ன, 40வது கல்யாணம் கூட பண்ணுவேன்.. மஞ்சக் கயிறுடன் வனிதா வெளியிட்ட செல்பி!

பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள்தான் வனிதா விஜயகுமார். இவர் சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இவரின் முதல் திரைப்படத்திலேயே நடிகர் விஜயுடன் இணைந்து நடித்துள்ளார். அதுமட்டுமன்றி, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தற்போது மிகவும் பிரபலமாகி விட்டார் என்றே சொல்லலாம்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவருடன் இருந்த இதர போட்டியாளர்களுடன் அடிக்கடி சண்டையிடுவதே இவருக்கு முழுநேர வேலையாக இருந்து வந்தது. டிஆர்பி ரேட்டிங்காக இவரின் அட்டகாசம் அனைத்தும் விஜய் தொலைக்காட்சி பொறுத்துக் கொண்டது.

இது ஒருபுறமிருக்க, இவரது இல்லற வாழ்க்கை அனைவர் மத்தியிலும் ஒரு கேலிக்கூத்தாக அமைந்துவிட்டது. புடவையை மாற்றுவது போல் புருசனையும் மாற்றி வருகிறார். முதல், இரண்டு, மூன்று என வரிசையாக திருமணம் செய்து வந்தார். இவரது மூன்றாவது திருமணம் பீட்டர் பால் என்ற ஒருவருடன் நடந்தது. சிறிது காலம் கிஸ்ஸும், ரொமான்ஸுமாக சுற்றித் திரிந்தனர்.

இவ்வாறு தொடர்ந்து திருமணம் என்ற பெயரில் ஆளை மாற்றிக்கொண்டே போகிறீர்களே என்று பலரும் இவரை விமர்சித்து வந்தனர். இந்நிலையில் நடிகர் பவர்ஸ்டார் உடன் வனிதா மாலை மாற்றிக் கொள்வது போல் ஒரு புகைப்படம் வெளிவந்ததும் நெட்டிசன்களுக்கு விமர்சனம் செய்ய சாதகமாக அமைந்து விட்டது.

vanitha
vanitha

தற்போது புதிதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாலியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார் வனிதா. இதனை பார்த்த நெட்டிசன்கள் பலவிதமாக இவரை கலாய்த்து வருகின்றனர்.

இது உங்கள் நான்காவது திருமணமா? என்று பலரும் கேலி செய்து வருகின்றனர். அதற்கு வனிதா, ‘நான் 4 திருமணம் செய்து கொள்வேன் அல்லது 400 திருமணம் செய்து கொள்வேன், உங்களுக்கு என்ன?’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.

 

Trending News