திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சீரியலில் என்ட்ரி கொடுக்கும் வனிதா.. டிஆர்பி ஏற்றுவதற்கு போட்ட பக்கா பிளான்

சர்ச்சை என்றாலே வனிதா தான் என்று சொல்லும் அளவுக்கு ஏகப்பட்ட சர்ச்சையில் சிக்கியவர் நடிகை வனிதா விஜயகுமார். எந்த மாதிரியான சர்ச்சைகள் இருந்தாலும் அதை அவர் பேசியே சரி கட்டி விடுவார்.

தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ள இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் மூலம் அவர் ரசிகர்களின் வெறுப்புக்கு ஆளானார் ஆனால் அதை பற்றியெல்லாம் கவலைப் படாத வனிதா நடிப்பில் பிஸியாகிவிட்டார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சியில் நடுவராக இருந்த வனிதா, ரம்யா கிருஷ்ணன் நடுவராக பங்கேற்ற டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். வனிதா இருக்கும் இடத்தில் பிரச்சனை இல்லாமல் இருக்குமா. அனைவரும் எதிர்பார்த்தபடி வனிதா, ரம்யா கிருஷ்ணனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

தற்போது வனிதா சொந்தமாக யூடியூப் சேனல், காஸ்ட்யூம் கடை என்று பிஸியாக இருக்கிறார். இருந்தாலும் தன்னை தேடி வரும் பட வாய்ப்புகளையும் ஏற்று நடித்து வருகிறார். அந்த வரிசையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் திருமதி ஹிட்லர்.

இந்த சீரியலில் அமித் பார்கவ், கீர்த்தனா, அம்பிகா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த சீரியலில் தான் வனிதா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். தற்போது மற்ற சேனல்கள் உடன் கடுமையாக போட்டி போட்டு வரும் ஜீ தமிழ் புதுமையான பல நிகழ்ச்சிகளை களமிறக்கி வருகிறது.

அதேபோல் நடிகை வனிதாவை வைத்து சீரியலின் டிஆர்பி ஏற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. வனிதா ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பான சந்திரலேகா சீரியலில் கெஸ்ட் ரோலில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

vanitha-cinemapettai
vanitha-cinemapettai

Trending News