Varalakshmi: வரலட்சுமி சரத்குமார் தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவை கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டார். தாய்லாந்தில் இவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் குடும்ப உறுப்பினர்கள் உட்பட வெகு சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து சென்னையில் பிரம்மாண்ட வரவேற்பு நடத்தப்பட்டது. அதில் முதல்வர் ஸ்டாலின் உட்பட அரசியல் பிரபலங்கள் மற்றும் தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

அது மட்டும் இன்றி ஆடம்பரமாக நடந்த அந்த திருமணம் குறித்து பல சர்ச்சை செய்திகளும் வெளிவந்தது. மாப்பிள்ளை வரலட்சுமிக்கு தங்க செருப்பு, வைர சேலை மற்றும் பல கோடி மதிப்புள்ள காஸ்ட்லி கிப்ட் ஆகியவற்றை கொடுத்ததாக செய்திகள் வெளிவந்தது.
வைரலாகும் வரலட்சுமியின் கல்யாண போட்டோ
மேலும் திருமண புகைப்படங்களை தவிர ரிசப்ஷன், மெஹந்தி நிகழ்ச்சி ஆகியவற்றின் போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் வெளியானது. இதனால் திருமணம் குறித்து பல விமர்சனங்கள் எழுந்தது.

இந்நிலையில் வரலட்சுமியின் திருமண புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதை வெளியிட்டுள்ள அவர் தன் கணவர் மேல் தனக்கு இருக்கும் காதல் பற்றியும் பதிவிட்டுள்ளார்.

அந்தப் புகைப்படத்தில் வரலட்சுமி அடர் சிவப்பு நிற பட்டுப்புடவை மற்றும் நகைகள் என தேவதை போல ஜொலிக்கிறார். அவருக்கு ஈடாக மாப்பிள்ளையும் பட்டு வேட்டி சட்டையில் கலக்கலாக இருக்கிறார் இந்த போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.
திருமண கோலத்தில் ஜொலிக்கும் வரலட்சுமி
- பல கோடிக்கு மகாராணியான வரலட்சுமி
- பொண்ணு கல்யாணத்தை பிரம்மாண்டமாக நடத்திய நாட்டாமை
- சரத்குமாரால் சங்கர் பட வாய்ப்பை இழந்த வரலட்சுமி