ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

இதுக்கு மேல நான் என்ன பண்றது.. எது பண்ணாலும் கண்டுக்க மாட்றாங்க.. கவலையில் பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் வந்த சுவடு காணாமல் சென்றுள்ளனர். அந்த வரிசையில் புதிதாக இணைந்துள்ளார் கேரளத்து வரவு. ஆரம்பமே ஸ்டைலிஷ் இயக்குனரின் படத்தில் வாய்ப்பு கிடைத்து இளைஞர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டார்.

அதன் பிறகு வந்த புதிதிலேயே முன்னணி நடிகை ரேஞ்சுக்கு வளரவேண்டும் என ஆசைப்பட்டு கிடைத்த படத்தையெல்லாம் ஒப்புக்கொண்டு நடித்தார். அதன் விளைவு அவர் நடித்த படங்கள் தொடர் தோல்வி பெற கொண்டாடிய ரசிகர்களே ஒதுக்கி விட்டார்கள்.

அதுமட்டுமல்லாமல் படத்துக்குப்படம் அம்மணியின் தோற்றம் ஸ்கிரீன் சைசுக்கு பெரிய கொண்டே சென்றது. படப்பிடிப்பில் காட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்க சொன்னால் மதியம் என்ன சாப்பிடலாம், இரவு என்ன சாப்பிடலாம் என கணக்குப் போட்டுக் கொண்டிருந்தாராம்.

அம்மணி தற்போது டயர் போல் ஆனதால் எந்த ஒரு படத்திலும் கமிட் செய்ய இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் ரெடியாக இல்லை. தெரிந்த ஒன்னு ரெண்டு இயக்குனர்களும் கைவிட்டதால் உடல் எடையை குறைத்தே ஆகவேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளாராம்.

ஆனால் கொரானா பிரச்சனையால் அனைத்து உடற்பயிற்சிக் கூடங்களும் மூடப்பட்டுள்ளதால் பழைய குருடி கதவை திறடி என அம்மணி வழக்கம்போல் வீட்டில் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறாராம். சமீப காலமாக அம்மணியின் உருவத்தை அவர்கள் குடும்பத்தினராலேயே கண்டு பிடிக்க முடியவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இப்படியே சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கி கொண்டிருந்தால் முன்னணி நடிகை இல்லை, மூன்றாவது ஹீரோயினாக கூட வாய்ப்பு கிடைக்காது என தலையில் ஒரு கொட்டு கொட்டி உடற்பயிற்சி செய்ய சொல்கிறார்களாம் அவருடைய பெற்றோர்கள். ஆனால் நடிகையோ இனி நம்ம சினிமாவில் நடித்து கிழிச்சது போதும் என முடிவெடுத்து விட்டாராம்.

கடைசியாக ஒரே ஒரு நடிகருக்கு மட்டும் தூதுவிட்டு பார்ப்போம் என முதல்பட ஹீரோவுக்கு அப்பப்போ கால் செய்து கொண்டிருக்கிறாராம். அந்த ஹீரோவோ, நானே எப்போதாவது தான் படம் நடிக்கிறேன், என் கிட்ட போய் இதெல்லாம் சொல்றயே என புத்திமதி சொல்கிறாராம்.

Trending News