வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ராக்கி கட்டியவர் கையால் தாலி கட்டிக் கொண்ட நடிகை.. கெட்ட பெயர் வந்தாலும் நினைத்ததை சாதித்த அம்மணி

சினிமாவில் தான் நம் கற்பனைக்கு எட்டாத கதையெல்லாம் காட்டுவார்கள். ஆனால் சில நடிகைகளின் வாழ்க்கையில் இப்படி எல்லாம் கூடவா நடக்கும் என்று நம்மை யோசிக்க வைக்கும் அளவுக்கு சம்பவங்கள் நடக்கும். அப்படித்தான் பிரபல நடிகை ஒருவர் தன் திருமண விஷயத்தில் கெட்ட பெயர் வந்தாலும் பரவாயில்லை என்று நினைத்ததை சாதித்து காட்டியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த ஸ்ரீதேவி முதலில் கமலை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார். ஆனால் அவர் தங்கச்சி என்று கூறியதால் வெறுத்துப் போய் பாலிவுட் பக்கம் சென்றவருக்கு அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டியது. இங்கு அடக்க ஒடுக்கமாக இருந்த ஸ்ரீதேவி அங்க போனதும் ஆளே மாறிப்போனார்.

Also read: ரஜினியை புறக்கணித்து கமலிடம் தஞ்சமடைந்த நடிகை.. அம்மா சிபாரிசு செய்தும் பலிக்காத பாட்சா

நடை, உடை, பாவனை என அனைத்தையும் மாற்றிக் கொண்ட அவர் அங்கு முன்னணி நடிகையாக வலம் வந்தார். அது மட்டுமல்லாமல் ஏற்கனவே திருமணமாகி குழந்தை, குட்டிகளுடன் இருந்த மிதுன் சக்கரவர்த்தி என்ற நடிகரையும் காதலித்தார். இருவரும் ரொம்பவும் நெருக்கமாக பழகியது நடிகரின் குடும்பத்தில் பூகம்பமாக வெடித்திருக்கிறது.

ஒரு கட்டத்தில் ஸ்ரீதேவி தன் காதலரிடம் நான் வேண்டுமா, உங்கள் குடும்பம் வேண்டுமா என்று கேட்டிருக்கிறார். உடனே சுதாரித்துக் கொண்ட மிதுன் சக்ரவர்த்தி குடும்பம் தான் வேண்டும் என்று ஸ்ரீதேவியை தூக்கி எறிந்து விட்டு சென்றிருக்கிறார். அதன் பிறகு தான் அவருக்கு போனி கபூருடன் திருமணம் நடந்திருக்கிறது. அதில் தான் வில்லங்கமே இருக்கிறது.

Also read: 2-ம் பாகத்திற்காக காத்திருக்கும் சூப்பர் ஸ்டார்.. படத்தைப் பார்த்து பிரமித்துப்போன ரஜினி

ஏனென்றால் ஸ்ரீதேவி ஆரம்பத்தில் போனி கபூரை அண்ணன் என்று தான் கூறி பழகி இருக்கிறார். அதிலும் அவருக்கு ராக்கி எல்லாம் கட்டி இருக்கிறார். இருந்தாலும் மிதுன் சக்கரவர்த்தி தன்னை தூக்கி எறிந்த காரணத்தால் கபூர் குடும்பத்தில் மருமகளாக வேண்டும் என்று அவர் திட்டம் போட்டு இருக்கிறார். இப்படித்தான் அவர் போனி கபூரிடம் நெருங்கி இருக்கிறார்.

அவரும் ஏற்கனவே திருமணமாகி குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தவர் தான். ஆனால் ஸ்ரீதேவி நான் வேண்டுமா குடும்பம் வேண்டுமா என்று கேட்டபோது நீதான் வேண்டும் என்று தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். அதன் பிறகு அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்திருக்கிறது. அந்த சமயத்தில் ஸ்ரீதேவி கர்ப்பமாக இருந்தார் என்று கூட ஒரு செய்தி உண்டு.

இப்படி தனக்கு கெட்ட பெயர் வந்தால் கூட பரவாயில்லை என பெரிய குடும்பத்திற்கு மருமகளாக வேண்டும் என்று ஸ்ரீதேவி ஆசைப்பட்டு இருக்கிறார். அதனாலேயே ராக்கி கட்டியவர் கையால் தாலியையும் கட்டிக்கொண்டார். அதன் பிறகு தமிழ் கலாச்சாரத்தை மறந்து விட்டு வடநாட்டு பெண்ணாகவே மாறிய ஸ்ரீதேவி போனி கபூருடன் ராஜ வாழ்க்கை வாழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

Also read: மனிதன் vs நாயகன் உண்மையில் ஜெயித்தது யார்? உண்மையை புட்டு புட்டு வைத்த தயாரிப்பாளர்

Trending News