சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

டேட்டிங் செய்து நைசாக காதலியை கழட்டி விட்ட நடிகர்.. வில்லியாக மாறி பழிவாங்கும் ஹீரோயின்

ஒரு படத்தில் சேர்ந்து நடித்து விட்டாலே அந்த ஜோடிக்கு நிஜ வாழ்க்கையிலும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிடுகிறது. இப்படி எத்தனையோ காதல் ஜோடிகளை நாம் பார்த்திருக்கிறோம். அதில் சிலர் திருமணம் செய்து செட்டில் ஆகியும் இருக்கிறார்கள்.

ஆனால் சில ஜோடிகள் நன்றாக ஜோடி போட்டு சுற்றிவிட்டு கடைசியில் டாட்டா காட்டி பிரிந்து விடுகிறார்கள். ஒரு சிலர் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி வெறுப்பேற்றிய கதைகளையும் பார்த்து இருக்கிறோம். ஆனால் இங்கு இளம் நடிகர் ஒருவர் பப்ளி ஹீரோயின் உடன் டேட்டிங் முடித்து விட்டு இப்போது எஸ்கேப் ஆகி விட்டாராம்.

ஆனால் நடிகை அவரை தீவிரமாக காதலித்த நிலையில் திருமணம் வரை கனவு கண்டிருக்கிறார். இப்போது நடிகர் தன்னை கழட்டி விட்டதால் கொதித்துப் போன அம்மணி வில்லியாக மாறி பழி வாங்கி வருகிறாராம். எத்தனை முறை போன் செய்தாலும் நடிகர் லைனுக்கு வராதது தான் இந்த கோபத்திற்கு காரணம்.

Also read: சதா நேரமும் சண்டை தான்.. இரண்டாவது பொண்டாட்டியால் புலம்பி தவிக்கும் இயக்குனர்

அதனாலேயே நடிகரை வெறுப்பேற்ற மறைமுகமாக சில வேலைகளை இவர் செய்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளது. அவ்வளவு ஈஸியா என்ன ஏமாத்திடலான்னு நினைச்சியா, நீ எங்க போனாலும் விடமாட்டேன் என சபதம் எடுக்காத துறையாக அவர் ஆவேசத்தோடு இருக்கிறாராம்.

தற்போது மறைமுகமாக இவர் செய்யும் வேலைகள் எப்போது வேண்டுமானாலும் அம்பலத்திற்கு வரலாம் என்கிறது திரையுலக வட்டாரம். அப்படி மட்டும் இந்த விஷயம் கசிந்தால் மிகப்பெரும் பிரளயமே வெடிக்கும் என்பதால் ஒட்டுமொத்த திரையுலகமும் நடிகையை பார்த்து பதறிப் போய் தான் இருக்கிறது.

Also read: தயாரிப்பாளர் என்ற போர்வையில் செய்த மட்டமான வேலை.. லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய மனைவி

Trending News