வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

குற்ற உணர்ச்சியில் தவித்த நடிகர்.. மனைவிக்கு வக்காலத்து வாங்கி நடிகை உடன் முற்றிய சண்டை

பிரபல நடிகை ஒருவர் அக்கடதேசத்தில் இருந்து வந்தாலும் கவர்ச்சியில் தாராளம் காட்டி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதுவே அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. தற்போது தன்னுடன் நடித்த சக நடிகர் ஒருவர் மீது நடிகைக்கு காதல் மலர்ந்தது. இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பிலும் இருந்தனர்.

ஆனால் கடைசியில் நடிகர் உன்னுடன் நட்பாக தான் பழகி வந்தேன் என்று சொல்லி ஏமாற்றி விட்டார். இதனால் நிலைகுலைந்து போன நடிகை சில காலம் சினிமாவில் தலை காட்டாமல் தனிமையில் வாழ்ந்து வந்தார். ஆனால் இப்படியே விட்டுவிட்டால் சினிமா மார்க்கெட்டும் போய்விடும் என மீண்டும் நடிக்க வந்தார்.

Also Read : கிளி போல பொண்டாட்டி இருந்தும், வப்பாட்டிக்கு ஆசைப்பட்ட இயக்குனர்.. போட்டு புரட்டி எடுத்த காதலி

அப்போது தான் நடிகை முன்பு இருந்ததை விட அபரிவிதமான வளர்ச்சி அடைந்தார். இதைத்தொடர்ந்து மீண்டும் காதலில் விழக்கூடாது என நடிகை முடிவெடுத்திருந்தாலும் ஒரு கட்டத்தில் தன்னுடன் இணைந்து பணியாற்றிய நடிகர் மீது காதல் வயப்பட்டார். அதோடு மட்டுமல்லாமல் அவருக்காக எந்த எல்லைக்கும் செல்லும் அளவுக்கு காதல் வைத்திருந்தார்.

ஆனால் இதில் என்ன சிக்கல் என்றால் நடிகர் ஏற்கனவே திருமணம் ஆனவர். அவருக்கு குழந்தைகளும் உள்ள நிலையில் மனைவியை கழட்டிவிட்டு நடிகைகளுடன் சுற்றி வந்தார். ஒரு கட்டத்தில் நடிகரின் மனைவிக்கு இந்த விஷயம் தெரிய கோர்ட், கேஸ் வரை சென்றார். ஆனால் நடிகர் எதற்குமே பிடி கொடுத்த பாடு இல்லை.

இதனால் நடிகரின் மனைவி ஒரு கட்டத்திற்கு மேல் இவரை பிரிந்து விவாகரத்து பெற்றுவிட்டார். அதன் பிறகு தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்காக நடிகர் வக்காலத்து வாங்கி இருக்கிறார். இதனால் கோபப்பட்ட நடிகை நடிகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட சண்டை முற்றி உள்ளது. அதன் பிறகு நீயும் வேண்டாம் என நடிகரை நடிகை தூக்கிப்போட்டு விட்டாராம்.

Also Read : தண்ணிய போட்டு நடுரோட்டில் பரவச நிலையில் ஆடிய நடிகை.. அலேக்காக தூக்கிட்டு போய் வீட்டில் பார்க் செய்த நடிகர்

- Advertisement -

Trending News