வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

ஆடை மாற்றுவது போல் காதலரை மாற்றும் நடிகை.. அப்பாவுக்கு தப்பாமல் பிறந்த வாரிசு

நடிப்பில் அந்த நடிகரை அடிச்சுக்க ஆளே கிடையாது. அதனாலேயே அனைவருக்கும் அவர் மீது ஒரு மரியாதை உண்டு. ஆனால் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையோ எப்போதும் சர்ச்சையான செய்தி தான்.

அந்த நடிகரின் வாரிசும் இப்போது அப்பாவைப் போலவே இருக்கிறார். திருமணத்தில் பெரிதாக ஆர்வம் இல்லாத நடிகை அதை வெளிப்படையாகவே போட்டு உடைத்தார்.

முதலில் வெளிநாட்டு பிரபலத்தை காதலித்த நடிகை அவரிடம் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். பிறகு என்ன நடந்ததோ அவரை பிரேக் அப் செய்துவிட்டு வேறு ஒருவரை காதலித்தார்.

இதுவும் எத்தனை நாளைக்கு என்று வெளிப்படையாகவே திரையுலகில் பேசினார்கள். ஆனால் நடிகை அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தன் காதலருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை எல்லாம் வெளியிட்டு வந்தார்.

இப்போது பார்த்தால் இந்த ஜோடி நீ யாரோ நான் யாரோ என்று ரீதியில் பிரிந்துள்ளனர். ஒருவரை ஒருவர் அன்பாலோ செய்திருக்கும் இந்த ஜோடி அதற்கான காரணத்தை மட்டும் சொல்லவில்லை.

ஆனால் ஆக்ஷன் இயக்குனர் தான் இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில் நடிகை இவருடன் ஓவர் நெருக்கமாக நடித்தது தான் பிரச்சனையின் ஆரம்ப புள்ளி.

ஏற்கனவே இயக்குனர் வீட்டில் இந்த பிரச்சனை புகைந்து கொண்டிருக்கிறது. அதே பிரச்சனையை தான் நடிகையும் சந்தித்திருக்கிறார். ஆனால் இவர் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என காதலரை தூக்கிப் போட்டு விட்டார்.

இந்த விஷயத்தில் அவர் அப்பாவை அப்படியே உரித்து வைத்திருக்கிறார். அவர் 8 அடி என்றால் வாரிசு 32 அடி பாய்ந்து விட்டது. இதை தான் இப்போது கோடம்பாக்க வட்டாரத்தில் சத்தம் இல்லாமல் பேசி வருகின்றனர்.

Trending News