சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

அழகுக்காக முகத்தை மாற்றிய நடிகை.. அகோரமாக மாறிய சம்பவம்

பொதுவாக நடிகைகள் தங்களை அழகாக காண்பிக்க பல அழகு சாதனை பொருட்கள் உபயோகிப்பது சர்வ சாதாரணம் தான். இதில் உள்ள அதிகப்படியான கெமிக்கல் காரணமாக சில வருடங்களிலேயே அவர்களது முகத்தில் பிரச்சனை ஏற்பட்டு விடுகிறது.

அதிலும் சிலமும் நடிகைகள் தங்களது முகத்தில் சில பாகங்களை அழகாக காட்ட பிளாஸ்டிக் சர்ஜரி செய்வது வழக்கமாக வைத்திருக்கிறார்கள். பிரபல நடிகை கூட பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது முன்பு சர்ச்சையாக இருந்தது.

மேலும் குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு சில நடிகைகள் தங்கள் முகத்தை வேறுபடுத்தி காட்ட வேண்டும் என்பதற்காகவும் இவ்வாறு செய்து வருகிறார்கள். அதேபோல் தான் இப்போது ஒரு நடிகை செய்தது அவருக்கே ஆபத்தாக முடிந்து விட்டது.

நடிகையின் குடும்பம் சினிமாவில் வேறு பிரிவில் உச்சத்தில் இருக்கிறார்கள். ஆனால் இவருக்கு ஹீரோயினாக வேண்டும் என்ற ஆசை இருந்ததால் சினிமாவுக்குள் நுழைந்து விட்டார்.

அவர் நடித்த முதல் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிவிட்டது. அதன் பிறகு வாய்ப்பு குறைந்ததால் நடிகை கவலையில் இருந்துள்ளார். அப்போது அவரது தோழி மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய சொல்லி இருக்கிறார்.

நடிகையும் தோழியின் பேச்சைக் கேட்டு பிளாஸ்டிக் சர்ஜரி செய்த நிலையில் அழகாக இருந்த முகம் அகோரமாக மாறிவிட்டது. ஒரு சில படங்களில் வாய்ப்பு வந்த நிலை இப்போது அதுவும் இல்லாமல் போய்விட்டது.

Trending News