வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

உயரப் பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது.. நயன்தாரா ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து கிளாமர் ரூட்டுக்கு மாறிய நடிகை

Nayanthara: தற்போது வளர்ந்து வரும் எந்த நடிகையை கேட்டாலும் அவர்களுடைய ஒரே டார்கெட் நயன்தாரா என்று தான் சொல்வார்கள். அந்த அளவிற்கு நம்பர் ஒன் இடத்தை பல வருடங்களாக தக்க வைத்துக் கொண்டிருக்கும் இந்த லேடி சூப்பர் ஸ்டார் தற்போது பாலிவுட்டிலும் அறிமுகமாகிறார்.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் உடன் இணைந்து நடித்திருக்கும் இவர் அடுத்தடுத்து ஹிந்தி படங்களில் கவனம் செலுத்தவும் திட்டமிட்டு இருக்கிறார். அதை சாக்காக வைத்து தற்போது பல நடிகைகளும் நயன்தாரா இடத்தை பிடிப்பதற்கு பல வழிகளில் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

Also read: இனி விட்டா பிடிக்க முடியாது என அவசர கல்யாணம் பண்ணின விக்கி.. பயந்த மாதிரியே நகரும் மோசமான கட்டம்

அதில் சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்படும் வாணி போஜன் நயன்தாராவையே மிஞ்சும் அளவுக்கு கிளாமர் ரூட்டில் களமிறங்கி அதிர்ச்சி கொடுத்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் அவர் நடத்தி இருந்த போட்டோ சூட் பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. ஏனென்றால் அதில் அவர் ரொம்பவும் கிளாமராக உடை அணிந்திருந்தார்.

ஆரஞ்சு நிறத்தில் கொசுவலை போன்ற ஒரு டிரஸ்ஸை அணிந்திருந்த வாணி போஜன் பல கிளாமர் போஸ்களையும் கொடுத்து அசத்தியிருந்தார். அந்த போட்டோ தான் இப்போது இணையதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. சின்னத்திரையில் குடும்ப குத்து விளக்காக நடித்து வந்த இவர் பெரிய திரைக்கு வந்தவுடன் தனக்கேற்ற கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

Also read: தங்க முட்டை போடும் வாத்து நயன்தாரா.. அட்லியால் வந்த சந்தேகம், கண்கொத்தி பாம்பாக மாறிய விக்கி

அதிலும் அடக்க ஒடுக்கமாக மட்டுமே நடித்து வந்த இவர் சமீப காலமாக படங்களிலும் கொஞ்சம் ரொமான்ஸ் தூக்கலாக நடிக்க ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் தற்போது அம்மணியின் இந்த போட்டோக்களை பார்த்த பலரும் நயன்தாராவை போல் நீங்களும் ஹிந்தி படங்களில் நடிக்க போகிறீர்களா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இருந்தாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை பெறுவதற்காகவும் அடுத்தடுத்த வாய்ப்புகளை பிடிப்பதற்காகவும் தான் அவர் இப்படி மாறிவிட்டதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. என்னதான் உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகுமா என்று பலரும் இவருக்கு இந்த கிளாமர் செட்டாகாததை விமர்சித்து வருகின்றனர்.

Also read: சீரியல் நடிகை என ஒதுக்கிய ஹீரோக்கள்.. தேடி வர வைத்து முகத்தில் கரியை பூசிய வாணி போஜன்

Trending News