வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பகிரங்கமாக போட்டுக் கொடுத்த நயன்தாரா.. கனெக்ட் தோல்வியால் புத்தாண்டை இப்பவே கொண்டாடும் நடிகை

நயன்தாராவின் நடிப்பில் நேற்று வெளியான கனெக்ட் திரைப்படம் ரசிகர்களுடன் அவ்வளவாக கனெக்ட் ஆகவில்லை. படத்தை பார்த்த பலரும் பாசிட்டிவ், நெகட்டிவ் என கலவையான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். தற்போது இப்படம் தோல்வி அடைந்து விட்டதை பார்த்து பிரபல நடிகை ஒருவர் புத்தாண்டை இப்பவே கொண்டாடி தீர்த்திருக்கிறாராம்.

பொதுவாக நயன்தாரா சொந்த தயாரிப்பு படம் என்றால் ப்ரமோஷனுக்காக ஒரு பேட்டி கொடுப்பார். அதேபோல் இந்த படத்தை பிரமோஷன் செய்யும் வகையில் அவர் ஒரு பேட்டி அளித்தார். அதில் படம் பற்றி மட்டுமல்லாமல் தன்னுடைய சொந்த வாழ்க்கை பற்றியும் பல விஷயங்களை அவர் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதில் ஒரே ஒரு விஷயம் மட்டும் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Also read: காசு வாங்கிக்கொண்டு நயன்தாராவுக்கு கூஜா தூக்கும் பிரபலம்.. ரிவ்யூ பார்த்து கடுப்பில் காரி துப்பிய நெட்டிசன்ஸ்

அதாவது நயன்தாரா தன் நடிப்பை ஒரு நடிகை விமர்சித்திருந்தது பற்றி தெரிவித்து இருந்தார். என்னது லேடி சூப்பர் ஸ்டார் நடிப்பையே ஒரு நடிகை குறை சொன்னாரா என்று ஆர்வத்துடன் பார்த்த ரசிகர்கள் அந்த நடிகை யார் என்பதையும் சல்லடை போட்டு தேடி எடுத்தனர். மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்ததால் மட்டுமே ரசிகர்களுக்கு பரிச்சயமான மாளவிகா மோகனன் தான் அந்த நடிகை.

அவர் பேசிய அந்த வீடியோவை தேடி எடுத்த ரசிகர்கள் அவரை கண்டபடி திட்டி தீர்த்தனர். ஏனென்றால் மாளவிகா மோகனுக்கு சுட்டு போட்டாலும் நடிப்பே வராது என்பது திரையுலகில் அனைவருக்குமே தெரியும். மேலும் அவரை வைத்து படம் எடுத்து திண்டாடிய இயக்குனர்கள் இப்போது அவரை கண்டாலே தெறித்து ஓடும் அளவுக்கு இருக்கும் அம்மணியின் நடிப்பு.

Also read: தளபதி நடிகையை தட்டி பறித்த அஜித்.. விக்னேஷ் சிவனால் உடைய போகும் நயன்தாரா மார்க்கெட்

இப்படி இருக்கும் அவர் நயன்தாராவை கிண்டல் செய்தால் நம் ரசிகர்கள் சும்மா விடுவார்களா. சோசியல் மீடியாவில் மாளவிகா மோகனை ரசிகர்கள் கலாய்த்து தள்ளிவிட்டனர். இதனால் கடுப்பான அவர் நயன்தாரா மீது தீராத வெறுப்பில் இருந்திருக்கிறார். மறைமுகமாக நாம் சொன்ன ஒரு வார்த்தையை அவர் வேண்டும் என்று பகிரங்கமாக அம்பலப்படுத்தி விட்டாரே என்ற கோபம் தான் அது.

இதனால் அப்செட்டில் சுற்றிக் கொண்டிருந்த மாளவிகாவுக்கு கனெக்ட் படத்தின் ரிசல்ட் பயங்கர சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது. இதை அவர் நடித்துக் கொண்டிருக்கும் சூட்டிங் ஸ்பாட்டிலேயே அனைவரிடமும் சொல்லி சொல்லி சிரித்திருக்கிறார். இன்னும் சில நாட்களில் வர இருக்கும் புத்தாண்டை அவர் இப்போதே கொண்டாடி மகிழ்கிறாராம். அது மட்டுமல்லாமல் இந்த விஷயத்தை தெரிந்தவர் தெரியாதவர் என்று அனைவரிடமும் சொல்லி சந்தோஷப்பட்டு வருகிறார் என்கிறது கோலிவுட் வட்டாராம்.

Also read: போட்ட காசை எடுக்க முடியாமல் திணறும் நயன்தாரா.. கனெக்ட் படத்தின் முதல் நாள் வசூல்

Trending News