வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

கிசுகிசுவால் கேரியரை தொலைத்த அக்ரகாரத்து நடிகை.. பல வருடம் கழித்து வெளிச்சத்திற்கு வந்த உண்மை

சினிமாவைப் பொருத்தவரை கிசு கிசு என்பது சாதாரணமாகிவிட்டது. சில ஜோடிகள் இரண்டு, மூன்று முறை ஒரே படத்தில் நடித்தால் அவர்களை சேர்த்து வைத்த கிசுகிசுக்கள் வெளியாகிறது. சிலர் இந்த கிசுகிசுவால் திருமணமும் செய்து கொள்கின்றனர்.

சில நடிகைகளின் வாழ்க்கையை கிசுகிசு புரட்டி போட்டுள்ளது. அதாவது தன்னுடைய முதல் படத்திலேயே முத்திரை பதித்த அக்ரகாரத்து நடிகையை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

Also Read :போன் போட்டு படுக்கையில் அட்ஜஸ்ட் பண்ண சொன்ன இயக்குனர்.. கூலாக சொன்ன பதிலால் அதிர்ச்சி

ஆனால் வெள்ளித்திரையில் அவரால் ஜொலிக்க முடியாமல் போய்விட்டது. ஏனென்றால் முதல் படத்தின் போது இப்படம் வெளியாவதற்கு முன் இயக்குனர் வேறு எந்த படத்திலும் ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என கூறி உள்ளார். ஆனால் அந்த நடிகையின் குடும்ப சூழ்நிலை காரணமாக அடுத்தடுத்த படங்களில் நடித்துள்ளார்.

இதை தொடர்ந்து முன்னணி நடிகரின் பத்திரிக்கையில் ஒரு நடிகருடன் இந்த நடிகை இணைந்து இருப்பது போல போட்டோ தயார் செய்து கிசுகிசு எழுதப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் அந்த பத்திரிக்கையாளர்கள் நடிகைக்கு போன் செய்து பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.

Also Read :அப்பா பெயரை காப்பாற்ற வரும் 2வது வாரிசு.. குடும்பப் பெயரை கெடுத்த மூத்த நடிகர்

அப்போது வசதியில்லாத அந்த நடிகையின் குடும்பத்தினர் போட்டோ போட்டால் போடட்டும், நாங்க உன்னோட இருக்கிறோம் என சமாதானப்படுத்தி உள்ளனர். அதேபோல் அந்த பத்திரிக்கையாளர்கள் பொய்யான செய்தியை எழுதி வெளியிட்டுள்ளனர். அதன்பின்பு சினிமாவே வேண்டாம் என ஒதுங்கி விட்டார் நடிகை.

அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிடலாம் என்று நினைத்த நிலையில் சின்னத்திரையில் வாய்ப்பு கிடைக்க மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார். தற்போது பல வருடங்கள் கழித்து மீண்டும் அந்த நடிகை சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

Also Read :24 மணி நேரமும் போதை, அப்பதான் ஸ்டோரி நல்லா வருமாம்.. மேடையில் மட்டமாக பேசிய இயக்குனர்

Trending News