ஒருவருடைய உடலை பார்த்து கேலி, கிண்டல் செய்வது தற்போது அதிகமாக இருக்கிறது. அதிலும் திரைத்துறையில் இருக்கும் பெண்கள் இதுபோன்ற உருவக் கேலிகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அப்படி ஒரு பிரச்சினையை தான் பிரபல நடிகை ஒருவரும் எதிர்கொண்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பல சவாலான கதாபாத்திரங்களை துணிச்சலுடன், தைரியமாக நடிப்பதில் பெயர் போனவர் அந்த நடிகை. இதனால் அவர் சந்தித்த பிரச்சினைகள் ஏராளம் ஆனால் அவர் அந்த பேச்சுக்களை எல்லாம் காதில் வாங்காமல் தனக்கு பிடித்த கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
தமிழ் நாட்டைப் பூர்வீகமாக கொண்ட அந்த நடிகை தமிழில் சூப்பர் நடிகருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர். கோலிவுட்டில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகை தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
கதைக்கு தேவைப்பட்டதால் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்திய அந்த நடிகைக்கு ஆரம்ப காலத்தில் பல பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கிறது. அதாவது இவரை புக் செய்ய வந்த இயக்குனர்கள் இவருடைய உடல்வாகை பார்த்து இவரை ரிஜக்ட் செய்து இருக்கின்றனர்.
அதாவது மிகவும் ஒல்லியான உடலமைப்பைக் கொண்ட இந்த நடிகையைப் பார்த்த இயக்குனர்கள் தங்கள் படங்களில் அவரை நடிக்க வைக்க தயங்கி இருக்கிறார்கள். மேலும் முன்னழகு கவர்ச்சியாக இல்லை என்று கூறி அவருக்கு பட வாய்ப்புகளை மறுத்ததாக தற்போது நடிகை மிகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற துயரங்களை இந்த நடிகை மட்டுமல்லாமல் திரைத்துறையில் இருக்கும் பல நடிகைகளும் அனுபவித்து வருகின்றனர். திறமையை பார்த்து கிடைக்காத வாய்ப்பு கவர்ச்சி காட்டினால் தான் கிடைக்கும் என்ற ஒரு நிலைமை தற்போது திரையுலகில் இருக்கிறது.