வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

ஷாலினி மாதிரி உச்ச நட்சத்திரமாக இருக்கும்போது திருமணம்.. 21 வயதில் கால் கட்டு போடப்பட்ட 4 நடிகைகள்

பொதுவாக சினிமா துறை என்று வந்துவிட்டாலே லேட்டா தான் திருமணத்தை முடிப்பார்கள். ஆண்கள் சினிமா துறையில் இருந்தால் காலா காலத்தில் திருமணத்தை முடித்துவிட வேண்டும், என்று குடும்பத்தினர் நினைப்பார்கள். அதற்க்கு ஆண்களும் ஒத்துழைப்பார்கள்.

ஏன் என்றால், திருமணத்தால் அவர்கள் career பாதிக்க போவதில்லை. ஆனால் பெண்கள், திருமணம் செய்துகொண்ட பிறகு, குடும்பம் குழந்தை என்று வந்தபின், சினிமாவில் தொடர்ந்து நீடிப்பது பெரும் சவால் என்றே கூறலாம். மேலும் பெண்களுக்கு அழகு தான் முக்கியம் என்று நினைக்கும் இண்டஸ்ட்ரியில் இருப்பதால், கட்டாயம் திருமணத்தை தள்ளி போடுவார்கள்.

ஆனால் இதில் விதிவிலக்காக ஒரு சில நடிகைகள் உள்ளனர். அவர்கள், சிறு வயதிலேயே திருமணத்தை முடித்துவிட்டார்கள். அதுவும் உச்ச நட்சத்திரமாக இருந்தபோதே ஒரு சில நடிகைகள் திருமணத்தை முடித்துள்ளார்கள். அவர்களை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஷாலினி: இவர் திரைத்துறையில் உச்சநட்சத்திரமாக இருக்கும்போதே திருமணத்தை முடித்துவிட்டார். அஜித்தை காதலித்த இவர் தனது 21 ஆவது வயதில், அவருடன் செட்டிலாக முடிவு செய்து திருமணத்தை முடித்துவிட்டார். அதன் பிறகு, அவர் நடிக்கவும் இல்லை. இப்போது வரை குடும்பத்தையும் பிசினஸிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

ஜெனிலியா: நடிகை ஜெனிலியா, பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்தார். அவர்கள் இருவரும் முதல் படத்தில் படிக்கும்போதே காதல் மலர்ந்துவிட்டது. இந்த நிலையில், தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்துவந்தபோது திடீரென தனது திருமண அழைப்பிதழை ஷேர் செய்தார். தன்னுடைய 24-ஆவது வயதில் திருமணத்தை முடித்துவிட்டு, தொடர்ந்து நல்ல படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

அதிதி ராவ்: இவர் நடிகர் சித்தார்த்தை சமீபத்தில் இரண்டாவதாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவர் வெறும் 24 வயது இருக்கும் போது சத்யதீப் மிஸ்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு பின் சில காரணத்தினால் பிரிந்து விட்டார். அதன் பிறகு தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த இவர் சமீபத்தில் சைலெண்டாக சித்தார்த்தை திருமணம் முடித்துவிட்டார்.

அமலா பால்: மைனா படத்தின் மூலம் அறிமுகமான இவர் முன்னணி நடிகையாக வளம் வரும் நேரத்தில் தன்னுடைய 23-ஆவது வயதிலே, இயக்குனர் எ.எல். விஜயை திருமணம் செய்துகொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு ஏற்பட இருவரும் பிரிந்து விட்டனர். இதை தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார். ஆடை படம் இவருக்கு மோசமான விமர்சனங்களை பெற்று தந்தது. தற்போது கர்ப்பத்துக்கு பிறகு இரண்டாவது திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக உள்ளார்.

Trending News