வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ரகசியமாக விஜய் டிவி பிரபலத்துடன் 2வது திருமணம் செய்த நடிகை.. புடிச்சாலும் புடிச்ச புளியங்கொப்பை

Vijay Tv Serial Artist Marriage: எந்த அளவுக்கு வெள்ளித்திரை பிரபலங்கள் மக்களிடம் பிரபலமாகி விடுகிறார்களோ, அதே போல் சின்னத்திரை சீரியலில் நடிக்கும் நட்சத்திரங்களும் எளிதாக பரிச்சயமாகி விடுகிறார்கள். அந்த வகையில் அவர்கள் எந்த ஒரு விஷயங்கள் செய்தாலும் அப்பட்டமாக சமூக வலைதளங்களில் போட்டு உடைத்து விடுகிறார்கள்.

அப்படித்தான் விஜய் டிவி சீரியல் நடிகை ஒருவர் அவருடைய இரண்டாவது திருமணத்தை ரகசியமாக விஜய் டிவி பிரபலத்துடன் செய்திருக்கிறார். அந்த சீரியல நடிகை வேறு யாருமில்லை நாம் இருவர் நமக்கு இருவர், அன்பே சிவம் மற்றும் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பிரியமான தோழி போன்ற சீரியலில் நடித்து வரும் நடிகை தீபா தான்.

Also read: லாஸ்லியா போல காதல் கிசுகிசுக்காக தேர்வு செய்யப்பட்ட பிக் பாஸ் போட்டியாளர்.. 19 வயது நடிகையை தூக்கிய விஜய் டிவி

இவருக்கு முதல் திருமணம் நடந்து ஒரு மகனும் இருக்கிறார். ஆனால் அந்த கணவரை முறைப்படி விவாகரத்து பெற்று மகனுடன் பல வருடங்களாக தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி நாடகத்தின் தயாரிப்பு மேலாளராக இருக்கும் சாய் கணேஷ் என்பவரை காதலித்து தற்போது திருமணம் செய்து கொண்டார்.

இவரை சின்னத்திரை வட்டாரத்தில் பாபு என்று தான் அழைப்பார்கள். இவர்களுடைய காதலுக்கு பாபு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் யாருக்கும் தெரியாமல் இரகசியமாக தீபாவை மறுமணம் செய்து விட்டார். அடுத்ததாக இவர்களுடைய திருமணத்தையும் உஷாராக பதிவு செய்துவிட்டு அதன் பின்னே தீபா அனைத்து புகைப்படங்களையும் தற்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

Also read: பத்தி எறிய போகும் பிக் பாஸ் வீடு.. டிஆர்பிக்காக முரட்டு வில்லனை தூக்கிய விஜய் டிவி

இதற்கிடையில் ஏற்கனவே ஜீ தமிழில் சூப்பர் மாம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தீபா தனியாக வாழ்ந்து வருவதை சொல்லி மிகவும் மன உடைந்து பேசி இருக்கிறார். அந்த வகையில் சில மாதங்களுக்குப் பிறகு தனக்கு ஏற்ற ஒரு சரியான துணையை தேடி மீதமுள்ள வாழ்க்கையை சந்தோசமாக கழிக்க முடிவெடுத்து இருக்கிறார்.

அதனால் விஜய் டிவியில் இருக்கும் பாபுவை திருமணம் செய்து இவருக்கு இருந்த கஷ்டங்கள் அனைத்தையும் போக்கும் படி நல்ல வெயிட்டான ஆள பார்த்து மறுமணம் செய்து கொண்டிருக்கிறார். இவர்களுடைய திருமணத்திற்கு சின்ன திரையில் உள்ள கோ ஆர்டிஸ்ட்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

சீரியல் ஆர்ட்டிஸ்ட் தீபாவின் 2வது திருமணம்

serial-artist-deepa
serial-artist-deepa

Also read: எதிர்நீச்சல் சீரியலை பின்னுக்குத் தள்ளிய விஜய் டிவி சீரியல்.. ரொமான்ஸில் பின்னி பெடல் எடுக்கும் டாம் அண்ட் ஜெர்ரி

Trending News