சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

நயன்தாரா பாணியில் நடித்து அவரேயே ஓரம்கட்டி விருது வாங்கிய நடிகை.. புலம்பி வரும் லேடி சூப்பர்ஸ்டார்

நடிகை நயன்தாரா லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வந்துகொண்டிருக்கும் நிலையில், இந்தாண்டு அவர் நடிப்பில் வெளியான காத்துவாக்குல இரண்டு காதல், கனெக்ட் உள்ளிட்ட படங்கள் தோல்வியுற்றது. இந்த 2 படங்களையும் விக்னேஷ் சிவன் தயாரித்த நிலையில், நயன்தாராவிற்கு மார்க்கெட் சரியும் அளவிற்கும் படத்தை எடுத்துள்ளதாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

இதற்கும் மேலாக வாடகை தாய் விவகாரம், படங்கள் இல்லாமை என நயன்தாராவை சுற்றி பிரச்சனைகள் தான் சூழ்ந்துள்ளது. நயன்தாராவின் இந்த சூழலை பயன்படுத்தி பிரபல நடிகைகளான சமந்தா, திரிஷா உள்ளியோர் லேடி சூப்பர்ஸ்டார் பட்டத்திற்காக பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றனர். த்ரிஷா நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன், சமந்தாவின் யசோதா திரைப்படமும் பெரும் ஹிட்டான நிலையில் இருவருக்கும் மார்க்கெட் எகிறியுள்ளது.

Also Read: எல்லாத்தையும் உல்டாவாக செய்யும் நயன்தாரா.. ஓடாத படத்துக்கு இவ்வளவு அலப்பறையா

இதனிடையே நடிகை நயன்தாரா எப்போதுமே பெண் கதாபாத்திரங்களை மையமாக வைத்தே படங்களில் நடித்து வருவார். தற்போது இவரை காப்பியடித்து சில நடிகைகள் பெண் கதாப்பாத்திர முதன்மை கதைகளில் கமிட்டாகி வருகின்றனர். அப்படி இந்தாண்டு வெளியான திரைப்படங்களில் நடிகர் சூர்யாவின் 2டி என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்த கார்கி திரைப்படம் சக்கைபோடு போட்டது.

நடிகை சாய்பல்லவி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை இயக்குனர் கவுதம் ராமச்சந்திரன் இயக்கியிருப்பார். தனது தந்தையை பொய்யான வழக்கிலிருந்து காப்பாற்ற போராடும் மகளாகவும், அதே தந்தையின் தவறை தைரியமாக வெளிச்சத்திற்கு கொண்டு வரும் பெண்ணாகவும் படம் முழுவதும் தன்னந்தனியாய் வலம் வருவார் சாய்பல்லவி. சாய்பல்லவியின் எதார்த்தமான நடிப்பு, கார்கி என்ற பெயருக்கேற்ற துணிச்சல் என படம் முழுதும் ரசிகர்களை மெய்சிலிர்க்க பார்க்க வைத்தார்.

Also Read: திரிஷாவுக்கு பயத்தை காட்டிய நயன்தாரா.. விஜய்க்கு ஜோடி போட தீயாக வேலை செய்யும் குந்தவை

இப்படத்திற்காக அண்மையில் சென்னையில் நடந்த சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவில் சாய்பல்லவிக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. சாய்பல்லவியின் ரசிகர்கள் ஒருபக்கம் சந்தோஷமாக இருந்தாலும், ஆக்ஷன் காட்சிகள், பிரம்மாண்டமான செட்டுகள், பெரிய பட்ஜெட் படங்களில் நடித்த தென்னிந்திய நடிகைகள் பலரும் அவர் மீது வயித்தெரிச்சலில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதில் முக்கியமாக நடிகை நயன்தாரா சாய்பல்லவி மீது செம காண்டில் உள்ளாராம். ஏனென்றால் விருதுகளை வாங்கி குவிப்பதில் நயன்தாரா நம்பர் ஒன் என சொல்லலாம். ஆனால் இந்த வருடம் நயன்தாராவுக்கு ஏற்பட்ட சிக்கல்களால் தனக்கு வரவேண்டிய விருதுகள் எல்லாம் சாய்பல்லவிக்கு போய்விட்டதாக கடுப்பில் உள்ளாராம்.

Also Read: அப்படி மட்டும் படுக்கவே மாட்டேன்.. கனெக்ட் படத்தை விட நேரில் பயமுறுத்தும் நயன்தாரா

Trending News