வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

நீருப்பைத் தேடி வந்த யாஷிகா.. விஜய் டிவி மூலம் விட்ட மார்க்கெட்டை பிடிக்க திட்டமா

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக இருப்பவர் நிரூப்.

இவர் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் நடிகை யாஷிகா ஆனந்தின் முன்னாள் காதலர் ஆவார். தங்கள் காதலை முறித்துக் கொண்டாலும் யாஷிகா தன் முன்னாள் காதலருக்கு இந்த பிக்பாஸ் வாய்ப்பை வாங்கிக் கொடுத்துள்ளார்.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிப் போட்டியை நோக்கி முன்னேறி வரும் நிலையில் போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக அவர்களது குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து அவர்களை மகிழ்கின்றனர்.

அதில் ஒரு இன்ப அதிர்ச்சியாக நடிகை யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். ஒரு கண்ணாடி பெட்டியில் யாஷிகா நிற்கிறார். அவரை பார்த்த சந்தோஷத்தில் நிரூப் வேகமாக ஓடி வருகிறார். கார் விபத்துக்கு பின் யாஷிகா தற்போது பொதுவெளியில் கொஞ்சம் கொஞ்சமாக நடமாடி வருகிறார்.

அவர் குணமாகி இருப்பதை கண்ட சந்தோஷம் நிரூப் முகத்தில் அப்பட்டமாக தெரிகிறது. போட்டியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக் கூறிய யாஷிகா, எல்லோரும் சூப்பரா விளையாடுறீங்க என்று பாராட்டியுள்ளார். மேலும் நிரூப்பை பார்த்து நீ ரொம்ப நல்லா விளையாடுற, உன்னை பார்த்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது என்று கூறினார்.

பின்னர் ராஜுவை பார்த்து ஆரம்பத்தில் இருந்தது போல் கலகலப்பாக இருங்கள், எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், இன்னும் மூன்று வாரம் தான் இருக்கிறது என்று உற்சாகமாக பேசினார். யாஷிகாவின் இந்த வரவினால் பிக்பாஸ் வீடு சிறிது நேரம் கலகலப்பாக மாறியது.

இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் நிகழ்வு இன்று இரவு விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்கள் எதிர்பாராத பல சர்ப்ரைஸ்கள் நடந்து வருவதால் அவர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கின்றனர்.

Trending News