செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

ஜோடி போட கேட்டது ஒரு குத்தமா? தயாரிப்பாளர் மகனைக் கண்டு அலறி ஓடும் நடிகைகள்

மிகப் பெரிய தயாரிப்பாளர் ஒருவரின் மகனுக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகைகள் முதல் இளம் நடிகைகள் வரை அனைவரும் முடியாது என்று சொல்வது சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எண்ண முடியாத அளவுக்கு பல கோடிகளுக்கு சொந்தக்காரர்தான் அந்த தயாரிப்பாளர். இவர் படம் என்றாலே வெற்றிதான் என எழுதி வைத்துக் கொள்ளலாம். அந்த அளவுக்கு தரமான படங்களை தயாரிப்பதில் வல்லவர்.

அப்படிப்பட்டவரின் மகன் சினிமாவிலும் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தன்னுடைய அப்பா பெரிய தயாரிப்பாளர் என்பதால் அந்த நடிகருக்கு பெரிய அளவு மார்க்கெட் இல்லை என்றாலும் தன்னுடைய படங்களில் முன்னணி நடிகைகளுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார்.

அதுமட்டுமில்லாமல் மார்க்கெட் இல்லாத நடிகையாக இருந்தாலும் சம்பளத்தை அள்ளிக் கொடுத்து அந்த நடிகருக்கு ஜோடியாக விடுவாராம் அந்த தயாரிப்பாளர். இப்படி மகனைப் பார்த்து பார்த்து செதுக்கி வரும் அந்த தயாரிப்பாளர் அடுத்ததாக ஒரு மிகப்பெரிய பட்ஜெட் படத்தை எடுக்க உள்ளாராம்.

இந்த படத்தில் நடிக்க பல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் அந்த தயாரிப்பாளர். ஆனால் யாருமே அந்த நடிகருடன் நடிக்க முடியாது என ஓபன் ஆக சொல்லிவிட்டார்களாம். அதற்கு என்ன காரணம் என்பது தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார் அந்த நடிகரின் தந்தை.

ஆனால் அந்த நடிகர் நடிகைகளுடன் ஜோடியாக நடிக்கும் போது சில சில்மிசங்கள் செய்வதாக செய்திகள் வருகின்றன. இதன் காரணமாகவே நடிகைகள் அவருடைய படங்களில் நடிப்பதில் இருந்து விலகிக் கொள்கின்றனர் என்ற ஒரு கருத்தும் பரவலாக இருக்கிறது.

Trending News