பொதுவாக ஹீரோயின் என்றால் இளம் வயதாக இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பது சகஜம். ஆனால் குழந்தை பருவம் தாண்டிராத பல சிறுமிகள் தற்போது ஹீரோயினாகி நடித்து வருகின்றனர். அப்படி சிறுவயதிலேயே ஹீரோயினான சில நடிகைகளை பார்ப்போம் வாங்க.
எஸ்தர் அனில்:

பாபநாசம் படத்தில் கமலின் இரண்டாவது குழந்தையாக வரும் இவரை யாரும் மறந்திருக்க முடியாது. தமிழில் மட்டுமல்ல மலையாளத்திலும் அதே கதாபாத்திரத்தில் மோகன்லால் மகளாக நடித்தவர். இவர் தற்போது ஊளு என்னும் மலையாளப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார். இவரின் தற்போதைய வயது பதினேழு.
ஸ்ருதி:

ரமணா படத்தில் விஜயகாந்தின் பக்கத்து வீட்டு குழந்தையாய் நடித்த இவர் தனது பதினான்காம் வயதிலேயே பாண்டியராஜன் மகன் ப்ரித்வியுடன் கைவந்த கலை என்னும் படத்தில் ஹீரோயினாக நடித்தார். படம் சரியாக போகாததால் அப்படியே காணாமல் போய்விட்டார்.
திவ்யா நாகேஷ்:

அருந்ததி படத்தின் மூலம் பிரபலமான குழந்தை நட்சத்திரம். சிறுவயது அனுஷ்காவாக அந்த படத்தில் நடித்திருப்பார். இவர் தனது பதினாறாம் வயதிலேயே ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
பொன் சுவாதி:

வியாபாரி படத்தில் வடிவேலுவின் மகளாய் வருவார். ஒரு இயக்குனரின் டைரி படத்தில் வேலுப்ரபாகரனுக்கு ஜோடியாக மிகவும் கவர்ச்சியில் தோன்றி அனைவரையும் அதிரவைத்த நடிகை. பதினேழு வயதில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
நிவேதா தாமஸ்:

தமிழில் குருவி படத்தில் விஜயின் தங்கையாக அறிமுகமான குழந்தை நட்சத்திரம். தனது பதினாறாம் வயதிலேயே போராளி படத்தின் மூலம் ஹீரோயினாக மாறினார். தற்போது தெலுங்கு சினிமா துறையில் முக்கியமான நடிகையாக மிளிர்ந்து வருகிறார்.
ஷ்ரியா ஷர்மா:

சில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யா ஜோதிகாவின் சுட்டிப் பெண்ணாக வந்து நம் மனதில் இடம் பிடித்தவர். தனது பதினேழாம் வயதிலேயே காயகுடு என்னும் தெலுங்கு படத்தில் ஹீரோயினாகிவிட்டார். தற்போது தொலைக்காட்சிகளிலும் பல விளம்பரங்களில் நடித்து வருகிறார்.
ரதி அக்னிஹோத்ரி:

பெயருகேற்றாற்போல் அழகில் ரதியேதான். புதியவார்ப்புகள் படம் மூலம் தனது பதினாறாம் வயதிலேயே நடிகையாக அறிமுகமானவர். ஒரே வருடத்தில் கிட்டத்தட்ட ஆறு படங்கள் நடிக்குமளவிற்கு பயங்கர பிசியான நடிகையாய் இருந்தவர். கமல், ரஜினி என்று அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்து பெரும் புகழ் பெற்றவர்.
பானுப்ரியா:

தனது பதினைந்து வயதிலேயே மெல்லப்பேசுங்கள் என்னும் தமிழ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் இவர். பின்னாளில் கமல், ரஜினி போன்ற பெரிய நடிகர்களுடன் நடித்தாலும் தனது தாய் மொழியான தெலுங்கில்தான் அதிகம் கவனம் செலுத்தினார். தெலுங்கில் எண்ணற்ற படங்கள் நடித்து டாப் நடிகையாக திகழ்ந்தவர்.