சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

zomato ஊழியருக்கு நடந்த கொடுமை.. அந்த பொண்ண முதல்ல விசாரிங்க சார்.. கொந்தளிக்கும் பிரபல நடிகைகள்

கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூரை சேர்ந்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட் மற்றும் சோசியல் இன்ஃப்ளூயன்ஸரான ஹிதேஷா சந்திரனி என்ற பெண், தன்னை ஸொமேட்டோ ஊழியர் காமராஜ் என்பவர் தாக்கியதாக மூக்கில் ரத்தம் சொட்டசொட்ட வீடியோ ஒன்றை பதிவிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதன்பின்பு ஸொமேட்டோ நிறுவனம் அந்த ஊழியரை வேலையில் இருந்து தூக்கியது மட்டுமல்லாமல், பின்பு காமராஜ் கர்நாடக காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அதன்பின்பு தற்போது காமராஜ் தன் மீது எந்த குற்றமில்லை என்றும் டெலிவரி கொடுப்பதற்கு தாமதமானதால்,

அந்தப் பெண் தன்னை செருப்பால் அடித்ததால் தடுக்க முயற்சி செய்யும்போது மூக்கில் தன்னுடைய கை இடித்து விட்டது என்றும் கண்ணீர் விட்டு தனக்கு ஆதரவு தெரிவிக்குமாறு வாக்குமூலம் ஒன்றை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனைப் பார்த்த பின்பு பலரும் அவருக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். குறிப்பாக பிரபல பாலிவுட் நடிகையும், பிரியங்கா சோப்ராவின் தங்கையுமான பரிணீத்தி சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் ஸொமேட்டோ ஊழியருக்கான பரிந்து பேசி ட்விட் செய்துள்ளார்.

Parineeti-Chopra-twit

அதேபோன்று தமிழ் சினிமாவில் உதயம், சகுனி படத்தின் மூலம் கதாநாயகியாக பிரபலமான, தெலுங்கு நடிகை பிரணிதா சுபாஷ் தனது ட்விட்டர் பதிவில், ஸொமேட்டோ ஊழியர் மற்றும் பாதிக்கப்பட்ட பெண் இருவருக்கும் இடையே என்ன நடந்தது என்ற உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என்றும்,

Pranitha-Subhash-twit

டெலிவரி ஊழியரின் பக்கம் நியாயம் இருந்தால் அதனை நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் ட்விட் செய்துள்ளார். எனவே இந்த சம்பவமானது தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

Trending News